ரெட் ரூஃப் இன்
ரெட் ரூஃப் இன் அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் சங்கிலியாகும். ரெட் ரூஃப் இன் சுமார் 400 விதமான இடங்களை அமெரிக்காவில் மட்டும் கொண்டுள்ளது. இதில் முதன்மையானவை அமெரிக்காவின் மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ளன.[1]
நிறுவுகை | 1972 |
---|---|
நிறுவனர்(கள்) | Jim Trueman |
தலைமையகம் | Columbus, Ohio, United States |
அமைவிட எண்ணிக்கை | 400+ |
முதன்மை நபர்கள் | Andrew Alexander, President |
தொழில்துறை | Hospitality |
பணியாளர் | 4,500+ |
இணையத்தளம் | www |
வரலாறு
தொகுஒஹியோவின் கொலம்பஸில் ரெட் ரூஃப் இன் முதன் முதலாக தொடங்கப்பட்டது. ஜிம் ட்ரூமேன் என்பவரால் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், விருந்தினர்களுக்கு சுத்தமான, வசதியான அறைகளை அவர்களின் கட்டுப்படுத்தப்பட்ட விலைகளுக்குள் கொடுப்பதை முக்கியமாக கொண்டிருந்தது. மிச்சிகனின், கலமஸூ பகுதியில் கிழக்கு கோர்க் தெருவில் அமைந்துள்ள ரெட் ரூஃப் இன் ஹோட்டல்தான் இதுவரை அமைக்கப்பட்ட ரெட் ரூஃப் இன் ஹோட்டல்களில் மிகவும் பழமையான மற்றும் இயங்கும் ஹோட்டலாக உள்ளது. இது 1973 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 2004 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் இவர்களின் ‘ஸ்லீப் சீப்’ எனும் ஆங்கில வாசகங்களுடன் கூடிய சட்டைகள் மிகவும் பிரபலப்பலமானவை. 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விலையுயர்வினால் பாதிக்கப்பட்டாலும் அப்போதைய நேரடி போட்டியாளர்களான பட்ஜெடெல் மற்றும் டேஸ் இன் ஹோட்டல்களின் கட்டணத்தினைவிட குறைந்த கட்டணத்தினையே ரெட் ரூஃப் இன் வசூலித்தது. இதனால் இதன் வசனம் ‘ஹிட் த ரூஃப்’ என்று மாற்றப்பட்டது.
1990 ஆம் ஆண்டுகளின் பிற்பாதியில் மார்டின் முல் எனும் நடிகர் ரெட் ரூஃப் இன் ஹோட்டலுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் நடித்தார். அக்கோர் எனும் நிறுவனம் ரெட் ரூஃப் இன் ஹோட்டலை 1999 ஆம் ஆண்டு சுமார் 1.115 பில்லியன் டாலர் செலவில் ஆக்கிரமித்தது. அத்துடன் 324 இடங்களையும், 37,208 அறைகளையும் அதிகமாக இணைத்தது.[2] [3]
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்கோர் நிறுவனம் சிட்டிகுரூப் எனும் நிறுவனத்திடம், ரெட் ரூஃப் இன் ஹோட்டலை சுமார் 1.3 பில்லியன் டாலர்களுக்கு விற்பதாக அறிவித்தது.[4] இந்த விற்பனை முழுமை பெற்றவுடன், அக்கோர்வட அமெரிக்கர்களின் சந்தையில் தனது முழுக்கவனத்தினையும் செலுத்தத் தொடங்கியது.
இருப்பிடம்
தொகுஒஹியோ மாகாணத்தில் உள்ள மவுண்டைன் வேடிக்கை மையம், கொலம்பஸ் கூட்ட அரங்கம் மற்றும் ஒஹியோ விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் ரெட் ரூஃப் இன் அமைந்துள்ளது. அத்துடன் போலரிஸ் ஃபேஷன் மற்றும் கிழக்கு நகர மையம் போன்றவை இதனருகில் அமைந்துள்ளன.[5]
அறைகள்
தொகுஇரு முழுப் படுக்கை (புகைப்பிடிக்க கூடாது)
தொகுஇரு முழுப் படுக்கைகளைக் கொண்ட இந்த அறை 144 சதுர அடிகள் (13 சதுர மீட்டர்கள்) அளவுடையது. கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி மற்றும் கட்டண முறையில் வழங்கப்படும் திரைப்படங்களும் உங்களின் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் அளிக்கவல்லது. வேண்டுகோளின் அடிப்படையில் மைக்ரோஅலை சமையல் சாதனம் மற்றும் குளிர்பதனப் பெட்டி போன்றவை வழங்கப்படும். கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. வானிலை கட்டுப்பாடு, ஒரு மேசை மற்றும் தேவைக்கேற்றாற்போல் அழைப்பு விடுக்கும்படியான தொலைபேசி வசதி போன்றவையும் இந்த அறையில் இருக்கும் பிற வசதிகளில் அடங்கும். இது புகைப்பிடிக்கக் கூடாத அறை ஆகும்.
இரு முழுப்படுக்கை (புகைப்பிடிக்கலாம்)
தொகுஇரு முழுப் படுக்கைகளைக் கொண்ட இந்த அறை 144 சதுர அடிகள் (13 சதுர மீட்டர்கள்) அளவுடையது. கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி மற்றும் கட்டண முறையில் வழங்கப்படும் திரைப்படங்களும் உங்களின் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் அளிக்கவல்லது. வேண்டுகோளின் அடிப்படையில் மைக்ரோஅலை சமையல் சாதனம் மற்றும் குளிர்பதனப் பெட்டி போன்றவை வழங்கப்படும். கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. வானிலை கட்டுப்பாடு, ஒரு மேசை மற்றும் தேவைக்கேற்றாற்போல் அழைப்பு விடுக்கும்படியான தொலைபேசி வசதி போன்றவையும் இந்த அறையில் இருக்கும் பிற வசதிகளில் அடங்கும். இந்த அறையில் புகைப்பிடிக்கலாம்.
லெசூர் கிங்க் (புகைபிடிக்கக் கூடாது)
தொகுஒரு ராஜ படுக்கை கொண்ட இந்த அறையில் கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி மற்றும் கட்டண முறையில் வழங்கப்படும் திரைப்பட வசதியும் உள்ளது. வேண்டுகோளின் அடிப்படையில் மைக்ரோஅலை சமையல் சாதனம் மற்றும் குளிர்பதனப் பெட்டி போன்றவை வழங்கப்படும். கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. அதிகப்படியான மெத்தைப் படுக்கை/ மெத்தை விரிப்பு, குளிரூட்டுதல் மற்றும் வானிலை கட்டுப்பாடு போன்றவையும் இந்த அறையில் இருக்கும் பிற வசதிகளில் அடங்கும். இது புகைப்பிடிக்கக் கூடாத அறை ஆகும்.
லெசூர் கிங்க் (புகைபிடிக்கலாம்)
தொகுஒரு ராஜ படுக்கை கொண்ட இந்த அறையில் கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி மற்றும் கட்டண முறையில் வழங்கப்படும் திரைப்பட வசதியும் உள்ளது. வேண்டுகோளின் அடிப்படையில் மைக்ரோஅலை சமையல் சாதனம் மற்றும் குளிர்பதனப் பெட்டி போன்றவை வழங்கப்படும். கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. அதிகப்படியான மெத்தைப் படுக்கை/ மெத்தை விரிப்பு, குளிரூட்டுதல் மற்றும் வானிலை கட்டுப்பாடு போன்றவையும் இந்த அறையில் இருக்கும் பிற வசதிகளில் அடங்கும். இந்த அறையில் புகைப்பிடிக்கலாம்.
சுப்பீரியர் கிங்க் (புகைபிடிக்கக் கூடாது)
தொகுஒரு ராஜ படுக்கை கொண்ட இந்த அறையில் கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி மற்றும் கட்டண முறையில் வழங்கப்படும் திரைப்பட வசதியும் உள்ளது. வேண்டுகோளின் அடிப்படையில் மைக்ரோஅலை சமையல் சாதனம் மற்றும் குளிர்பதனப் பெட்டி போன்றவை வழங்கப்படும். கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. அதிகப்படியான மெத்தைப் படுக்கை/ மெத்தை விரிப்பு, குளிரூட்டுதல் மற்றும் வானிலை கட்டுப்பாடு போன்றவையும் இந்த அறையில் இருக்கும் பிற வசதிகளில் அடங்கும். இது புகைப்பிடிக்கக் கூடாத அறை ஆகும்.
சுப்பீரியர் கிங்க் (புகைபிடிக்கலாம்)
தொகுஒரு ராஜ படுக்கை கொண்ட இந்த அறையில் கம்பி வடம் உதவியுடன் தொலைக்காட்சியினை பார்க்கும் வசதியும், கம்பி வடமில்லா முறையில் இணையவசதி மற்றும் கட்டண முறையில் வழங்கப்படும் திரைப்பட வசதியும் உள்ளது. வேண்டுகோளின் அடிப்படையில் மைக்ரோஅலை சமையல் சாதனம் மற்றும் குளிர்பதனப் பெட்டி போன்றவை வழங்கப்படும். கழிவக உபகரணங்கள் மற்றும் முடி உலரவைப்பானுடன் கூடிய கழிவறைகள் மற்றும் குளியலறைகள் உள்ளன. அதிகப்படியான மெத்தைப் படுக்கை/ மெத்தை விரிப்பு, குளிரூட்டுதல் மற்றும் வானிலை கட்டுப்பாடு போன்றவையும் இந்த அறையில் இருக்கும் பிற வசதிகளில் அடங்கும். இந்த அறையில் புகைப்பிடிக்கலாம்.
அடுத்த தலைமுறை வடிவமைப்பு
தொகு2012 ஆம் ஆண்டில், ரெட் ரூஃப் நிறுவனம் 200 மில்லியன் டாலர்கள் செலவில் நாடு முழுவதும் உள்ள தனது ஹோட்டல்களை அடுத்த தலைமுறை வடிவமைப்புகளுடன் சேர்த்து புதுப்பித்தது. உட்புற மற்றும் வெளிப்புற புதிய மரச்சாமான்கள், ஸ்பாவுடன் இணைந்த நவீன வசதிகளுடன் கூடிய குளியலறைகள், உயர்தர படுக்கை வசதிகள், மரச்சாமான்கள் போன்ற தோற்றம் கொண்ட வாராந்தா மற்றும் கிடைமட்டமான அதிக தெளிவுடன் கூடிய தொலைக்காட்சி.
குறிப்புகள்
தொகு- ↑ "Pet Friendly Hotel & Motel Rooms, Pet Policy, Safety & Tips". Red Roof Inn website. Accessed.
- ↑ Whitford, Marty (August 9, 1999). "Red Roof purchase to propel Accor to No. 3 in guestrooms worldwide". Hotel & Motel Management. Accessed
- ↑ "Accor 1999 half year results presentation" (PDF). Archived from the original (PDF) on 2012-03-08. பார்க்கப்பட்ட நாள் 2015-05-26.
- ↑ "Red Roof Inn Columbus". cleartrip.com.
- ↑ Stoessel, Eric (April 13, 2010). "Foreclosures Reveal Red Roof Inn Distress". Lodging Hospitality.