ரெவரெண்ட் டாக்டர் கார்ல் கிரால்
' மேதகு முனைவர் கார்ல் கிரால் இவர் 1838 ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் ஜெர்மனி நாட்டில் சேக்சனியில் உள்ள மீகெலன் எனும் இடத்தில் பிறந்தார். லீப்சிக் எனும் இடத்தில் கல்வி பயின்றார். 1870 இல் பாதிரியாராக அமர்த்தப்பட்டார்.
வருகை
தொகு1870 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
தமிழ்ப் பணி
தொகுஇவர் ஜெர்மன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். முழு திருக்குறளையும் மொழிபெயர்க்கும் முன் காலமானார். சிவஞான சித்தியார் எனும் நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.
பாராட்டு
தொகுபோப் அவர்கள் இவர் மொழிபெயர்ப்பை பயனுடைய ஒன்று என்று பாராட்டியுள்ளமை குறிப்பிடற்குரியது.
இறப்பு
தொகுஇவர் 1879 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தரங்கம்பாடியில் உயிர்நீத்தார்.
பார்வை நூல்
தொகுஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03