ரெவரெண்ட் வில்லியம் டெய்லர்

மேதகு வில்லியம் டெய்லர் இவர் சமயப் பணியாளராக 1815 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார்.

கல்விப் பணி தொகு

வேதத்தாட்சி என்ற நூலைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இது 1834 இல் சென்னையில் அச்சிடப்பட்டது. ஐரோப்பியர் தமிழ் கற்க வசதியாக இருக்க , இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களை வெளியிட்டார்.

தமிழ்ப் பணி தொகு

  1. வெற்றி வேற்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இம் மொழிபெயர்ப்பு தமிழில் உள்ள கீழைநாட்டு வரலாற்றுக் கையேடுகள் (1835—பதிப்பு ) என்ற பகுதியில் பிரிவில் தொகுதி 11 இல் சேர்க்கப்பட்டுள்ளது.
  2. கீழைநாட்டு வரலாற்றுச் சார்பான கையெழுத்துப் படிகளை மொழிபெயர்த்துள்ளார்.
  3. இராட்லர் அகராதியின் மூன்று, நான்கு பாகங்களை நிறைவு செய்துள்ளார்.
  4. தமிழ்க் கையேடுகளுக்கு அட்டவணை தயார் செய்துள்ளார்.

மொழிபெயர்ப்புக்குச் சான்று தொகு

கல்விக்கு அழகு கசடறக் கற்றல் --- என்பதற்கு the beauty of learning is learning without fault

பார்வை நூல் தொகு

ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03