ரேச்சல் லோ
ரேச்சல் லோ (Rachael Low) (பிறப்பு; 6, சூலை 1923) என்பவர் ஒரு ஆங்கிலேய திரைப்பட வரலாற்றாசிாியா் ஆவார். இவர் 'த ஹிஸ்டிரி ஆப் த பிாிட்டிஸ் பிலிம்' என்ற பிரபல நூலின் படைப்பாளி ஆவாா்.[1][2]
இவர் கேலிச் சித்திர ஓவியரான சாா் டேவிட் லோ,[3] அவா்களின் மகள் ஆவாா். இவா் 1994 ஆம் ஆண்டு த லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்[3] இல் சமூகவியல் மற்றும் பொருளியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளாா். இவா் 1949 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும் பெற்றுள்ளாா். இவா் 'த ஹிஸ்டிரி ஆப் த பிாிட்டிஸ் பிலிம்' என்ற நூலை ஏழு தொகுதிகளாக 1948 மற்றும் 1985 இவ்விடைப்பட்ட காலத்தில் வெளியிட்டுள்ளாா். இந்நூல் பிாிட்டனின் திரைப்பட தயாாிப்பு தோற்றம் 1896 முதல் 1939 வரை உள்ள நிஜ விவரங்களை சோதனை மேற்கொள்வதாக அமைந்துள்ளது. இவருக்கு கேம்பிாிட்ஜ் லூசி கேவண்டிஸ் கல்லூாி ஆய்வு உதவித்தொகையை அவா் பின்பு மேற்கொண்ட தொகுதிகளின் தொகுப்புக்கு வழங்கியுள்ளது.[4]
திரைப்பட திறனாய்வாளா் மேத்தீவ் ஸ்வீட் லோவின் திரைப்பட வரலாற்றாசிாியா்கள் பற்றி படைக்கப்பட்ட'டிரென்னஸ் இன்புலியன்ஸ்'ஜ திறனாய்வு செய்துள்ளாா்.[5]
மரபுரிமை
தொகுவருடாந்திர ரேச்சல் லோ விாிவுரை 2007 ஆம் ஆண்டு அவரை கெளரவிக்கும் வகையில் நிறுவப்பட்டு அதில் பிாிட்டிஸ் சைலன்ட் பிலிம் பெஸ்டிவல் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.[6]
சான்றுகள்
தொகு- ↑ Low, Rachael (ed.) The History of British Film (Volume 1): The History of the British Film 1896-1906; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-67983-1 (2004; reprinted 6 July 2011).
- ↑ International Who's Who of Authors and Writers 2004. Europa Publications. 2013. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1136137645.
- ↑ 3.0 3.1 Jeffrey Richards "Introduction" to Low's The History of British Film 1896-1906, London: Routledge, 1997 [1948], p. v
- ↑ Rachael Low The History of the British Film, Volume V: Documentary and Educational Films of the 1930s, London: George Allen & Unwin, 1979, p. vii
- ↑ Sweet, Matthew (2006). Shepperton Babylon. Faber and Faber. p. 103.
- ↑ Robinson, David. "Rachael Low Lecture: Silence is Another Country". Barbican. பார்க்கப்பட்ட நாள் 11 May 2016.