ரேச்சல் வால்
ரேச்சல் வால் ( Rachel Wall ) (சுமார். 1760 - அக்டோபர் 8, 1789) ஓர் அமெரிக்கப் பெண் கடற்கொள்ளைக்காரியாவார். மாசச்சூசெட்ஸில் தூக்கிலிடப்பட்ட கடைசி பெண்ணான இவர் கடற்கொள்ளையர் ஆன முதல் அமெரிக்கப் பெண்ணாகவும் இருந்திருக்கலாம்.[1]
ரேச்சல் வால் | |
---|---|
மரத்தில் செதுக்கப்பட்ட ரேச்சலின் உருவம் (1919) | |
பிறப்பு | சுமார் 1760 கார்லிசுலே , பென்சில்வேனியா மாகாணம் |
இறப்பு | 8 அக்டோபர் 1789 (வயது 29) பாஸ்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
இறப்பிற்கான காரணம் | தூக்கு |
கடற் கொள்ளை தொடர்பில் | |
வகை | கடல் கொள்ளை |
கூட்டு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
இயங்கிய காலம் | 1781–1782 |
செயற்பாட்டுக் களம் | நியூ ஹாம்சயர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுரேச்சல் வால் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கார்லிசுலே என்ற இடத்தில் ரேச்சல் சுமித் என்ற பெயரில் ஒரு பக்தியுள்ள பிரஸ்பைடிரியன் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் கார்லிசுலேவிற்கு வெளியே ஒரு பண்ணையில் வசித்து வந்தார். ஆனால் மகிழ்ச்சியாக இல்லை. தனது பெரும்பாலான நேரத்தை நீர்நிலைகளிலேயே கழித்தார். நீர்முனையில் இருந்தபோது, இவர் ஒரு குழுவால் தாக்கப்பட்டார். ஆனால் ஜார்ஜ் வால் என்ற மனிதனால் காப்பாற்றப்பட்டார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.[2]
கடற்கொள்ளைக்காரியாக மாறுதல்
தொகுரேச்சல் தனது கணவருடன் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவரது கணவனுக்கு ஒரு மீன்பிடி இசுக்கூனரில் வேலை கிடைத்தது. கடலில் அவருக்கு கிடைத்த நட்பு கடற்கொள்ளையாராக மாற உதவியது. ஜார்ஜ் தன்னுடன் ஐந்து மாலுமிகளையும் அவர்களது காதலிகளையும் உடன் கடலுக்கு அழைத்துச் சென்றார். உடன் ரேச்சலும் தனது கணவருடன் சென்றார்.[2]
ரேச்சல் மற்றும் இவரது குழுவினர் நியூ ஹாம்சயர் கடற்கரையில் தங்கினர்.[2] புயல்கள் ஏற்படும்போது கப்பலில் நின்றுகொண்டு உதவிக்காக அலறுவார்கள். உதவிக்கு வரும் பிற கப்பல் மாலுமிகள் கொல்லப்பட்டு அவர்களின் பொருட்கள் அனைத்தும் திருடப்படும். 1781 மற்றும் 1782 க்கு இடைப்பட்ட காலத்தில் இவ்வாறு 12 படகுகளைக் கைப்பற்றி, $6,000 ரொக்கம், விலை மதிப்பிட முடியாத பொருட்கள் ஆகியவற்றை திருடினர். இதில், 24 மாலுமிகளையும் கொன்றதும் அடங்கும்.[1]
கைது மற்றும் மரணதண்டனை
தொகுஎதிபாராதவிதமாக ஒரு படகு விபத்தில் இவரது கணவனும் அவரது குழுவினரும் கடலில் மூழ்கினர்.[1]ரேச்சல் வால் பாஸ்டனுக்குத் திரும்பி, ஒரு வீட்டில் வேலைக்காரியாகச் சேர்ந்தார். ஆனாலும் அடிக்கடி துறைமுகங்களுக்குச் சென்று அங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகளுக்குள் பதுங்கிச் சென்று உள்ளேயிருக்கும் பொருட்களைத் திருடுவதையும் தொழிலாக செய்து வந்தார். செப்டம்பர் 10, 1789 இல் மார்கரெட் பெண்டர் என்ற இளம் பெண்ணிடமுள்ளா பொருட்களை களவாடும்போது பிடிபட்டு கைது செய்யப்பட்டார். தான் யாரையும் கொல்லவில்லை என்றும் கடற் கொள்ளையர்களை விசாரிக்கும் வகையில் தன்னையும் விசாரிக்குமாறு கோரிக்கை வைத்தார்.[2] இருப்பினும், இவர் கொள்ளையடித்ததாகக் கண்டறியப்பட்டு அக்டோபர் 8, 1789 அன்று தூக்கிலிடப்பட்டார்.[3] "...எல்லாம் வல்ல இறைவனின் கரங்களில் நான் எனது ஆன்மாவை ஒப்படைக்கிறேன். அவருடைய கருணையை நம்பி... எனது 29வது வயதில் பிரஸ்பைடிரியன் தேவாலயத்தின் தகுதியற்ற உறுப்பினராக இறந்து விடுகிறேன்" என்று இவர் மேற்கோள் காட்டியதாக கூறப்படுகிறது. இவரது மரணமே மாசச்சூசெட்ஸில் ஒரு பெண் தூக்கிலிடப்பட்ட கடைசி நிகழ்வாக இருக்கிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Women and the Jolly Roger". Cindy Vallar. பார்க்கப்பட்ட நாள் 2008-05-23.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Biography of Rachel Wall - Seva.net". www.seva.net. Archived from the original on February 12, 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-05-22.
- ↑ "Historical Female Pirates". Katy Berry. Archived from the original on 2018-01-30. பார்க்கப்பட்ட நாள் 2008-05-23.
மேலும் படிக்க
தொகு- Life, last words and dying confession, of Rachel Wall: who, with William Smith and William Dunogan, were executed at Boston, on Thursday, October 8, 1789, for high-way robbery (Boston printed broadside)
- Boston's Histories: Essays in Honor of Thomas H. O'Connor by Thomas H. O'Connor, James M. O'Toole, and David Quigley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55553-582-8
- The Power of the Press: The Birth of American Political Reporting by Thomas C. Leonard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-503719-7
வெளி இணைப்புகள்
தொகு- Rachel Wall at ThePirateKing.com
- "The Tale of Rachel Wall "The Hitchhiker of the Sea" at Students.ou.edu". Archived from the original on அக்டோபர் 13, 2008. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2008.
- "Rachel Wall at Fionaurora.com". Archived from the original on சூலை 11, 2011. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2008.