ரேணு சக்கரவர்த்தி

இந்திய அரசியல்வாதி

ரேணு சக்கரவர்த்தி (Renu Chakravartty) என்பவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஒரு தலைவர் ஆவார், புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கல்வியாளர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

21 அக்டோபர் 1917 அன்று கொல்கத்தாவில் சதன் சந்திர ராய் மற்றும் பிரம்மகுமாரி ஆகியோருக்கு பிரம்மோ குடும்பத்தில் மகளாகப் பிறந்த இவர், கொல்கத்தாவில் உள்ள லோரெட்டோ கான்வெண்டில் பயின்றார். அதிக மதிப்பெண் பெற்றதால் கல்கத்தாவின் விக்டோரியா கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்து கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு கல்வியை கைவிடாமல் இலண்டன் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகத்தில் 1937-1939 காலக்கட்டத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்றுத் தேறினார்.[1][2][3]

இவர் டாக்டர் பிதான் சந்திர ராயின் மருமகள் ஆவார். அவரால் அரசியல் உணர்வு ஊட்டடப்பட்டு அரசியில் விவகாரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். பிரித்தானிய கம்யூனிஸ்ட் என்றும் ஆர்.பி.டி. என்று அழைக்கப்படவருமான ரஜினி பாமி தத் என்பவருடன் படிக்கும் காலத்தில் நல்ல நட்புறவு கொண்டார். 1938 ஆம் ஆண்டில், இவர் பிரிட்டனின் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். அதே ஆண்டு இந்தியா திரும்பியதும், இந்தியாவில் தடைசெய்யப்படிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகி, தீவிர இடதுசாரியாக ஆனார்.[4]

திருமணம் மற்றும் அரசியல்

தொகு

இவர் பிரபல பத்திரிக்கையாளர் நிகில் சக்கரவர்த்தியை 1942 இல் மணந்தார். 1940 களின் ஆரம்பத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியராக பணிபுரிந்தார். ராணி மித்ரா தாசுகுப்தா மற்றும் மணிகுந்தலா சென் ஆகியோருடன் சேர்ந்து, மகிளா ஆத்ம ரக்சா சமிதி என்ற அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அது தேபாகா இயக்கம் என்னும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கு வகித்தது.[5][6] ஆதரவற்ற பெண்களுக்காக, இவர் தன் தாயுடன், நாரி சேவா சங்கத்தில் ஈடுபட்டார். 1948 இல், இந்திய பொதுவுடைமைக் கட்சி தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டபோது, இவர் தலைமறைவாகிவிட்டார்.[1]

இவர் 1952 மற்றும் 1957 இல் பசீர்காட் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] பின்னர் 1962 இல் பராக்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] 1964 இல் பொதுவுடைமை இயக்கம் பிளவுபட்ட பிறகு, இவர் பழைய அமைப்பில் இருக்க முடிவு செய்தார், மற்றும் 1967 மற்றும் 1971 இல் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் இவர் அதே தொகுதியில் இருந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) எம். டி. இஸ்மாயிலால் தோற்கடிக்கப்பட்டார்.[10][11]

இந்திய நாடாளுமன்றத்தில் ரேணு சக்கரவர்த்தி பணியாற்றிய காலக்கட்டத்தை கோபாலகிருஷ்ண காந்தி மிகச் சுருக்கமாக எடுத்துரைத்தார்: "ஆரம்பகால மக்களவை மற்றும் மாநிலங்கவை டாக்டர் அம்பேத்கரால் நிர்ணயிக்கப்பட்ட" தினசரி மதிப்பீடுகளை விட ",எழுச்சிமிக்கதாக இருந்தது குறிப்பாக நாடாளுமன்ற விவாதங்களின் போது என்று கூறினார். ஒருங்கொளிக் கண்களைக் கொண்ட பெரோஸ் காந்தி, உமிழும் பூபேஷ் குப்தா, உணர்ச்சிவசப்பட்ட ஹிரன் முகர்ஜி, மயக்கமடையச் செய்யும் லட்சுமி மேனன், ரம்மனோகர் லோஹியா, உற்சாகமூட்டும் பாரிஸ்டர் நாத் பாய், போராடும் ரேணு சக்கரவர்த்தி, விடாமுயற்சியுள்ள மினூ மசானி, திகைக்கச் செய்கின்ற கா. ந. அண்ணாதுரை, மற்றும், கவிதை அடல் பிகாரி வாஜ்பாய். " ஆகியோரால் இந்த நாடாளுமன்ற அவை நன்கு செயல்பட்டது.[12]

1969இல் மேற்கு வங்க சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டு, இரண்டாவது ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார்.

நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் இவர் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார், பல வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தார் மற்றும் பல சந்தர்ப்பங்களில் சிறை சென்றார். இவர் பெண்கள் இயக்கத்தில் துடிப்பான பங்களிப்பாளராக இருந்தார். இவர் பல அமைப்புகளின் நிர்வாகக் குழுக்களில் இருந்தார்.

எழுத்துப் பணிகள்

தொகு

1940 முதல் 1950 வரையில் இடதுசாரி பெண்கள் குறித்து ஆய்வெ செய்து நூலாக எழுதினார். அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு செ. தர்மராஜனின் மொழிபெயர்பில் இந்தியாவில் பெண்கள் இயக்கம் என்ற பெயரில் வெளியானது.[13]

இறப்பு

தொகு

1994இல் மூளையில் குருதிக் கசிவு ஏற்பட்ட பாதிப்பினால் ஏப்ரல் 16 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Samsad Bangali Charitabhidhan (Biographical Dictionary) by Anjali Bose, Vol II, 3rd edition 2004, page 309, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86806-99-7, (in Bengali) Sishu Sahitya Samsad Pvt. Ltd., 32A Acharya Prafulla Chandra Road, Kolkata-700009
  2. "Members of Parliament – Lok Sabha - Profile". Chakravartty, Smt. Renu. reFocus india. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  3. "Chakravartty, Renu (1917-1994)". Blackwell Reference Online. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  4. "Nikhilda, a champion of press freedom, dies of cancer". Express News Service, 28 June 1998. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  5. "Chakravartty, Renu (1917-1994)". Blackwell Reference Online. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014."Chakravartty, Renu (1917-1994)". Blackwell Reference Online. Retrieved 9 July 2014.
  6. Women in Tebhaga Movement, India Net Zone
  7. "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  8. "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  9. "General Elections, India, 1962- Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
  10. "General Elections, India, 1967 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  11. "General Elections, India, 1971 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
  12. Gandhi, Gopalkrishna. "Three Cheers to Parliament". The Hindu, 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2014.
  13. "ரேணு சக்கரவர்த்தி: பெண்கள் வரலாற்றைப் படைத்த போராளி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_சக்கரவர்த்தி&oldid=4145358" இலிருந்து மீள்விக்கப்பட்டது