ரே லூயிஸ்

ரே லூயிஸ் அமெரிக்க கால்பந்தாட்ட வீரர். பதினேழு ஆண்டுகளாக தேசிய கால்பந்து கழகத்தில் இருந்தார். இதற்கு முன்னர் மியாமி பல்கலைக்கழகக் கல்லூரியின் குழுவிற்காக விளையாடினார். மைய வரிசையில் விளையாடி, மதிப்பிற்குரிய வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார். பின்னர், ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்காக பணிபுரிந்தார். 1996 முதல் 2012 வரை விளையாடி இருக்கிறார். இவர் நினைவாக, பால்டிமோரில் உள்ள வடக்கு நிழற்சாலைக்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது. பால்டிமோர் ரேவன்ஸ் குழுவிலும் விளையாடியுள்ளார்.

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரே_லூயிஸ்&oldid=2211515" இருந்து மீள்விக்கப்பட்டது