ரைக்வர்
ரைக்வர் (Raikva), சாந்தோக்கிய உபநிடதத்தின் ஆறாவது அத்தியாத்தில் கூறப்படும், ஆத்ம வித்தியாவை அறிந்த ஒரு ஏழை வண்டி ஓட்டி ஆவார்.[1]ரைக்வர் சம்வர்க வித்தையை மன்னர் ஜானசுருதிக்கு உபதேசித்தவர்[2]
வரலாறு
தொகுஞானம் அறிந்த மன்னர் ஜானசுருதி கற்றோருக்கு மேன்மையான பரிசுகளும், தானங்களும் வழங்குபவர்.[3]மன்னர் ஜானசுருதி தற்செயலாக அன்னப் பறவைகள் மூலம் ரைக்கவரின் ஞானத்தின் மகிமையைக் கேள்வியுற்றார்.
ஞானமும் கற்றறிந்தவனுமான ஜானஸ்ருதி பரிசுகளுடன் ரைக்வாவை அணுகினார். ரைக்கவர் மன்னரை சந்திக்க மறுத்து விட்டதால், மீண்டும் ஜானசுருதி தன் மகள் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் புற நகரத்தில் வண்டியின் கீழ் அமர்ந்திருந்த ரைக்வரை சந்தித்து ஆத்ம உபதேசம் வழங்க வேண்டினார். பின்னர் ஜானசுருதிக்கு ரைக்வர் சம்வர்க்க வித்தையை உபதேசித்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ L.D.Barnett. Brahma Knowledge.
- ↑ Swami Krishnananda. "The Samvarga Vidya of Sage Raikva".
- ↑ kva Kutty. "Speaking Tree-Raikava, the Cart-driver".
- ↑ ரைக்வா முனிவரின் சம்வர்க வித்யா