ரைட்டா தப்பா

ரைட்டா தப்பா (Rightaa Thappaa) என்பது 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்திய நாடகத் தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். புவனா எனும் சஞ்சிகையாளர் இத்திரைப்படத்தினை எழுதி இயக்கினார். ரமணா, உமா, சீதா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ”பெண்களைக் கேலிசெய்தல்” பற்றிய திரைப்படமே இதுவாகும்.[1] அத்துடன் ஓர் உண்மைச் சம்பவத்தில் இருந்தே இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[2] கார்த்திக் ராஜாவின் இசையிலும் மகேஸ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவிலும் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[3] இத்திரைப்படம் தமிழக அரசு திரைப்பட விருதுகள் இரண்டை வென்றுள்ளது. அவற்றில் ஒன்று சிறந்த குடும்ப திரைப்படத்துக்கான தமிழக அரசு திரைப்பட விருது ஆகும். மற்றையது நடிகை சீதாவிற்கான சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது ஆகும்.[4] அத்துடன் கேரளாவில் பெண்கள் இயக்குநர்களுக்கான திரைப்பட விழாவில் ஓர் விருதினையும் இத்திரைப்படத்தினை இயக்கிய புவனா பெற்றார்.[5]

ரைட்டா தப்பா
இயக்கம்ஆர். புவனா
தயாரிப்புபுவனா
விஜிசா
அக்சயா
கதைஆர். புவனா
இசைகார்த்திக் ராஜா
நடிப்புரமணா
உமா
சீதா
ஒளிப்பதிவுமகேஸ் முத்துசுவாமி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்விபி பிலிம் மேக்கர்ஸ்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்Awards : சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது
                சிறந்த குடும்ப திரைப்படத்துக்கான தமிழக அரசு திரைப்பட விருது
ஆண்டின் சிறந்த பெண் இயக்குநர்

மேற்கோள்கள்

தொகு
  1. "At last, a realistic Tamil film!". Rediff.com. 2005-03-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  2. "Entertainment Chennai / Film Review : Rightaaa Thappaa". The Hindu. 2005-02-25. Archived from the original on 2005-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  3. k. jeshi (2013-10-06). "Life through the lens". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  4. Malathi Rangarajan (2013-10-12). "Long and short". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  5. "Metro Plus Chennai / Gender : In the right direction". The Hindu. 2006-03-04. Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைட்டா_தப்பா&oldid=3710195" இலிருந்து மீள்விக்கப்பட்டது