ரைனெர்சோனைட்டு
ஆக்சைடு கனிமம்
ரைனெர்சோனைட்டு (Rynersonite) என்பது Ca(Ta,Nb)2O6) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் ஆக்சைடு கனிமமான ரைனெர்சோனைட்டு செஞ்சாய்சதுர படிகத்திட்டத்தில் படிகமாகிறது. இயற்கையில் இது மந்தமான ஒளி குன்றிய கனிமமாகவும் , ஒளிகசியும் தன்மையுடன் இழை போலவும் காணப்படுகிறது. பொதுவாக அரை வெண்மை முதல் வெளிர் ரோசா நிறத்தில் காணப்படும் ரைனெர்சோனைட்டு கருங்கல் தீப்பாறைகளில் தோன்றுகிறது. முதன்முதலில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான் டீகோ மாகாணத்தில் 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது[1][2][3].
கலிபோர்னியாவைத் தவிர்த்து உகாண்டா நாட்டின் கொலராடோ, கம்பாலா பகுதிகளிலும் ரைனெர்சோனைட்டு காணப்படுவதாக அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.webmineral.com/data/Rynersonite.shtml Webmineral
- ↑ http://www.mindat.org/min-3488.html Mindat.org
- ↑ "Handbook of Mineralogy - Rynersonite" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.