ரைபிள் பேரக்ஸ்
ரைபிள் பேரக்ஸ் (Rifle Barracks) என்பது இலங்கையின், கொழும்பின், கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஒரு முன்னாள் இராணுவ முகாம் ஆகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை துப்பாக்கிப் படையணியின் படைப்பிரிவு தலைமையகமாகவும், படைமுகாமாகவும் கட்டப்பட்டது. இலங்கை துப்பாக்கிப் படையணி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது இலங்கையில் பிரித்தானிய இராணுவ தானைவைப்பு துருப்புக்களின் வசம் வந்தது. இலங்கையின் விடுதலையைத் தொடர்ந்து இது புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை தரைப்படையின் வசம் வந்தது.
ரைபிள் பேரக்ஸ் | |
---|---|
கொழும்பு | |
வகை | பாசறை |
இடத் தகவல் | |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1800s |
பயன்பாட்டுக் காலம் |
1800s–தற்போது |
காவற்படைத் தகவல் | |
காவற்படை | இலங்கை சுழல் துப்பாக்கிப் படையணி |
இது பரந்த வராந்தாக்களுடன், இரண்டு மாடிகள் கொண்ட படைவீரர் தங்குமிங்களைக் கொண்டது. இந்த இடம் 1980கள் வரை இராணுவ தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது. 1990 களில் இந்த வளாகம் கைவிடப்பட்டு அழியும் நிலைக்கு உள்ளானது.
2006 ஆம் ஆண்டில் இது தீவிரமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பின்னர் இவ்விடம் பாதுகாப்புத் துறையினரின் பிள்ளைகளுக்கான பாடசாலையின் அமைவிடமாக ஆக்கப்பட்டது. 2007 சனவரியில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் குழந்தைகளுக்காக ஒரு தேசிய பாடசாலை நிறுவப்பட்டது.