ரொபின் தம்பு
ரொபின் தம்பு (Robin Tampoe, டிசம்பர் 29, 1930 - மார்ச் 23, 2000) என அழைக்கப்படும் ரவீந்திரா குமாரசுவாமி தம்பு (Rabindra Commarasamy Tampoe) இலங்கையின் முன்னோடித் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஆவார். தமிழரான இவர் சிங்கள மொழித் திரைப்படங்களையே தயாரித்தார். இவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான டபிள்யூ. எம். எஸ். தம்புவின் மகன் ஆவார்.[1][2][3][4]
ரொபின் தம்பு | |
---|---|
பிறப்பு | ரவீந்திரா குமாரசுவாமி தம்பு டிசம்பர் 29, 1930 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | மார்ச்சு 23, 2000 கொழும்பு, இலங்கை | (அகவை 69)
இருப்பிடம் | கொழும்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் |
சமயம் | கிறித்தவர் |
பெற்றோர் | டபிள்யூ. எம். எஸ். தம்பு |
வாழ்க்கைத் துணை | ரீட்டா பெர்னாண்டோ |
பிள்ளைகள் | விலாசினி தம்பு, சஞ்சீவ் தம்பு |
வலைத்தளம் | |
http://www.robintampoe.com |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுயாழ்ப்பாணத்தில் பிறந்த ரொபின் தம்பு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். 1950களின் நடுவில் கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயில இணைந்தார். ஆனாலும், திரைப்படத் துறையில் ஆர்வம் மிகுந்து தனது 25வது அகவையில் தனது தந்தையாரின் வழியில் திரைப்படத் தொழிலில் இறங்கினார்.[5] 1958 ஆம் ஆண்டில் தந்தையாருடன் இணைந்து செப்பாலி என்ற சிங்களத் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில் சிங்களத் திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது தடை செய்யப்பபட்ட பின்னர், தந்தையும் மகனும் இலங்கையில் தமது தொழிலை ஆரம்பித்தனர். 1959 முதல் 1974 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 20 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் ஜா-எல என்ற இடத்தைச் சேர்ந்த ரீட்டா பெர்னாண்டோ என்னும் சிங்களப் பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். மூத்தவர் விலாசினி தம்பு-ஹாட்டின் ரீயூனியன் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை இவர் நூலாக வெளியிட்டுள்ளார்[6]. ரொபின் தம்புவின் மகன் சஞ்சீவ் தம்புவும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டவர்.[7]
ரொபின் தம்பு திரைப்படத் தயாரிப்பில் மட்டுமல்லாது திரைப்பட இறக்குமதித் தொழிலும் ஈடுபட்டார். அத்துடன், கொழும்பு, மற்றும் வெளியூர்களில் பல திரையரங்குகளையும் சொந்தமாக இயக்கினார். இவற்றில் யாழ்ப்பாணத்தில் உள்ள ரீகல், வெல்லம்பிட்டி விலாசினி திரையரங்குகள் குறிப்பிடத்தக்கவை. 1983 ஆம் ஆண்டில் இலங்கையில் இனக்கலவரம் வெடித்ததை அடுத்து இவர் திரைப்படத் தொழிலில் இருந்து விலகிக் கொண்டார்.[5]
இயக்கிய திரைப்படங்கள்
தொகு- செப்பாலி (1958)
- சிரிமாலி (1959)
- சுவினீத்தா லலானி (1961)
- சுகத தேவி பிதுமா (1962)
- உடு சந்தே களு வல (1963)
- சுலலிதா சோபனி (1964)
- சாமஜே அப்பி ஒக்கொம சமனாய் (1964)
- சுதோ சுது (1965)
- சஞ்சீவன செவனெல்லே (1966)
- மகாதெனா முத்த (1966)
- சனசிலி சுவய (1966)
- தேகக்கக துக்க (1968)
- பிக் பொக்கெட் (1969)
- அத மெகெமாய் (1972)
- சுரேக்கா (1974)
மேற்கோள்கள்
தொகு- ↑ ROBIN THAMPO: Film Database - CITWF
- ↑ The Sunday Times Mirror Magazine
- ↑ "Spectrum | Sundayobserver.lk - Sri Lanka". Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
- ↑ தம்பிஐயா, தேவதாஸ் (2004). இலங்கை திரையுலக முன்னோடிகள். கொழும்பு: பூபாலசிங்கம் புத்தகசாலை. p. 245.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ 5.0 5.1 robintampoe.com
- ↑ Tampoe-Hautin, Vilasnee (2008). Last of the Big Ones. Colombo: Tower Hall Foundation Institute. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-51-1770-8.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ தம்பிஐயா தேவதாஸ், "பொன்விழாக் காணும் இலங்கைத் தமிழ்ச் சினிமா", வீரகேசரி, சூன் 2, 2013