ரோட்ஸ்டெர்

ரோட்ஸ்டெர் (Roadster) என்பது இரண்டு பேர் மட்டும் அமர்ந்து பயணிக்கக்கூடிய நிரந்தர கூரையில்லாத தானுந்து வகையாகும். இவற்றின் கூரைப்பகுதிகள் பொதுவாக மடக்கி வைக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறன. பெரும்பாலும் இவற்றின் கூரைப்பகுதிகள் தோல் அல்லது கடினமான துணி போன்ற பலமில்லாத பொருள்களால் வடிவமைக்கபட்டிருக்கும். தற்போது வெளிவரும் நவீன ரோட்ஸ்டெர் தானுந்து வகைகள் மடித்து வைத்துகொள்ளகூடிய இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட உலோகம் போன்ற கடினமான கூரைகளுடன் சந்தையில் கிடைக்கிறன. தானுந்து தயாரிப்பு நிறுவனங்கள் தற்கால நவீன ரோட்ஸ்டெர் வகை தானுந்துகளை பெயர்மாற்றி ”ஸ்பீட்ஸ்டர்” (Speedster) என்று அழைக்கின்றன.[1][2][3]

1935 Auburn ஸ்பீட்ஸ்டெர் விளம்பரம்
ஹோண்டா S2000 ரோட்ஸ்டெர்

பாரம்பரியம்

தொகு
 
1932 டியூசென்பர்க் J மர்பி ரோட்ஸ்டெர்

இவ்வகை தானுந்துகள் அறிமுகபடுத்தபட்டதிலிருந்தே பிரபலமாக இருந்து வந்துள்ளன ஃபோர்டு மாடல் T என்ற வகையிலிருந்து கேடிலாக் V-16 வரை அனைத்தும் மிகப்பிரபலமாக இருந்தன.

போட்டி பந்தைய கார்கள்

தொகு

ROADSTER என்கிற பெயர் அமெரிக்க தானுந்து பந்தைய போட்டிகளில் கலந்து கொள்ளும் இருக்கைக்கு முன்புறம் இஞ்சின் உடைய தானுந்து வகைகளுக்கும் பொருந்தும். ஆரம்பத்தில் இன்டியானாபோலிஸ் 500 என்கிறவகையுடன் இணைத்து வழங்கப்பட்டு வந்தது. ரோட்ஸ்டெர் வகை தானுந்துகளின் இஞ்சினும் ஷாப்ட்-உம் தானுந்தின் மையத்தில் அமைக்கபெற்றிருக்கும். இந்த அமைப்பு தானுந்தை இயக்கம் ஓட்டுனர் தாழ்ந்து அமர்ந்து கொள்ள அனுமதிக்கின்றது இதனால் நீள்வட்ட வடிவிலான பந்தைய போட்டி தடம் போன்ற இடங்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிபடுத்த முடிகிறது. ஃப்ராங் கர்டிஸ் அமெரிக்க போட்டி பந்தைய தானுந்து வடிவமைப்பாளர் தான் முதன் முதலில் 1952 ஆம் ஆண்டுவாக்கில் இண்டியானாபோலிஸ் 500 என்ற ரோட்ஸ்டெர் தானுந்தை வடிவமைத்தார். அந்த தானுந்தை பில் வுகொவிச் என்பவர் ஓட்டினார். மேலும் பல போட்டிகளில் முன்னணியிலும் இருந்தார். இவரின் அணியானது 1953 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் அதே தானுந்துகளை கொண்டு வெற்றிபெற்றது. A.J.வாட்சன் மற்றும் கூன் எப்பெர்லி என்பார்களும் ரோட்ஸ்டெர் வைகரி தானுந்து வடிவமைப்பில் குறிபிடத்தக்கவர்கள் ஆவர். பின்னர் ரோட்ஸ்டெர்கள் 1960'களின் இறுதிகளில் போட்டிகளிலிருந்து வெளியேறின. கடைசியாக ஜிம் ஹர்ட்பைஸ் என்பவர் வடிவமைத்து தானே 1968ஆம் ஆண்டு போட்டிகளில் ஒட்டியதே இறுதியாகும். ஜிம் ஹர்ட்பைஸ் 1969 ஆம் ஆண்டில் அதே தானுந்தை பந்தைய போட்டியில் ஒட்டியபோழுது அதன் இஞ்சின் குறைபாட்டின் காரணமாக கடைசி நான்கு சுற்றுகளில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் பலமுறை இந்த தானுந்து போட்டிகளில் பங்கேற்ற பொழுதிலும் அவை ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெறவில்லை.

 
ரோட்ஸ்டெர்-இன் ஆரம்பகால பெயர் பிரயோகம்
 

பின்னர் தானுந்தின் நடுவில் ஷாப்ட் அமைக்கப்பட்டிருந்த தானுந்துகளை விட ஷாப்ட்-க்கு அடுத்ததாக ஓட்டுனர் இருக்கை அமைக்கபெற்ற தானுந்துகள் மட்டுமே ரோட்ஸ்டெர் என்கிற பெயர் பெற்றன. பல பிரபல தானுந்து போட்டி பந்தையங்களில் போட்டியாளருடன் இணைந்து அதன் இயந்திரக் கைவினைஞரும் பயணிக்க வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போர் முதற்கொண்டு பல தருணங்களில் பல இடங்களில் இவ்வகை தானுந்துகள் தனது பணியை செவ்வனே செய்தாலும் இண்டியானாபோலிஸ் பந்தைய போட்டியாளர்கள் உருவாக்கிய ”ரோட்ஸ்டெர்” என்கிற பெயரே இன்றளவிலும் நிலைத்திருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "R". The Oxford Paperback Dictionary (Fourth). (1994). Oxford, UK: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280012-4. “roadster noun an open car without rear seats.” 
  2. Georgano, G. N., ed. (1971). "Glossary". Encyclopedia of American Automobiles. New York, NY USA: E. P. Dutton. pp. 215–217. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-525-097929. LCCN 79147885. Roadster. A two-passenger open car of sporting appearance.
  3. "Roadster".. (1861). Springfield, MA US: G. and C. Merriam. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்ஸ்டெர்&oldid=4171069" இலிருந்து மீள்விக்கப்பட்டது