இலக்கிடி என்று அழைக்கப்படும் இப்பகுதி மேல் பவானி அணையின் பின்புல நீர்தேக்கத்தில் சோலைகளும் புல்வெளிகளும் கலந்து அமைந்துள்ளது. இயற்கையை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாகும்.[1]

புல்வெளி

தொகு

புல்வெளிகள் இயற்கைச் சூழலில் தவிர்க்க இயலாத ஒரு முதன்மை கூறாகும். ஏனெனில் தரம் குன்றிய நிலப்பகுதிகளைச் சீரமைத்து அழகிய இடமாக மாற்றியமைப்பதில் புல்வெளி என்பது முதன்மை பங்களிக்கிறது.[2] இலக்கிடியில் காணப்படும் புல்வெளிகள் இப்பகுதியில் பெய்யும் மழைநீரையும் ஈரப்பதத்தையும் ஈர்த்து வைத்துக்கொள்கின்றது. அவற்றைச் சிற்றோடைகளாக மாற்றி ஆறுகள் உருவாக காரணமாக இருக்கின்றது. இலக்கிடி அமைதியும், பசுமையும் நிறைந்த இடமாக அமையப்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
  2. https://www.youtube.com/watch?v=dCNSM4jAKXY
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கிடி&oldid=3745258" இலிருந்து மீள்விக்கப்பட்டது