லக்ன பொருத்தம்

லக்னம் என்பது ஜாதக கட்டத்தில் முதல் வீடாகும். லக்னத்தை பயன்படுத்தி பொருத்தம் பார்ப்பது லக்ன பொருத்தம் ஆகும். லக்னத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பதினோறு வீடுகள் கணிக்கிடபடுகின்றன. இவைகளே ஜாதகரின் பண்புகளையும், வாழ்க்கை நிலையையும் நிர்ணயிக்கின்றன. ஜாதகத்தை பொறுத்தவரை லக்னம் என்பது உயிராகவும், ராசி என்பது உடலாகவும் கருதப்படுகிறது.

லக்னம் என்பது சூரியனை பொருத்து அமைவது. ராசி மற்றும் நட்சத்திரம் என்பது சந்திரனை பொருத்து அமைவது. இதில் சூரியனே நிலையானது என்பதால் லக்னமே நிலையானது. ஒரு ராசி என்பது 2¼ நாள் இருப்பதாகும். ஆனால் லக்னம் என்பது இரண்டு மணி நேரம் இருப்பதாகும். இதனால் ராசியை கொண்டு பலன்கள் மற்றும் பொருத்தங்கள் பார்ப்பதை கட்டிலும் லக்னத்தை கொண்டு பலன்கள் மற்றும் பொருத்தங்கள் பார்ப்பது இன்னும் சிறப்பாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும் போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் உள்ளதோ அந்த ராசி மண்டலம் லக்னமாக செயல்படும். லக்னத்தை கொண்டே விதி என்னும் தசா புத்திகள் கணக்கிடப்படுகின்றன. லக்னம் என்பதே ஜாதகத்தின் முதல் கட்டமாகும், இதிலிருந்தே மற்ற பாவங்கள் கணக்கிடபட்டு ஜாதகரின் பலன்கள் நிர்ணயம் செய்யபடுகிறது. லக்னத்திற்கு மற்ற பதினோறு பாவங்களின் பண்புகளும் சிறிது உள்ளதால் லக்னத்திக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது சார ஜோதிடத்தின் அடிப்படை விதி. உதாரணமாக திருமணத்திற்கு உரிய வீடான ஏழாம் வீடு கெட்டு இருந்தாலும் லக்னம் சிறப்பாக இருந்தால் திருமண வாழ்க்கை பிரச்சனையாக இருக்காது.

ராசியை விட உயர்ந்த லக்னத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்ப்பது சிறப்பாக இருக்கும். ஜாதகர் தன் லக்னத்திற்கு தீமை செய்யும் 4, 6, 8, 12 லக்னம் இல்லாதவரை திருமணம் செய்தால் நன்மை ஏற்படும். இதில் 4ம் வீடு 30% பிரச்சனைகளை ஜாதகருக்கு தரும். நட்சத்திரத்தை கொண்டு பொருத்தம் பார்க்கும் முறையை போலவே இது லக்னத்தை கொண்டு பொருத்தம் பார்க்கும் முறையாகும். நமது லக்னத்தில் இருந்து மற்றவரின் லக்னம் 4, 6, 8, 12 என இருந்தால் பொருத்தம் இல்லை என கொள்ளவும். இது ஒரு ஒரு லக்னத்தை பொருத்தும் மாறுபடும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்ன_பொருத்தம்&oldid=3241728" இலிருந்து மீள்விக்கப்பட்டது