லடிஸ் வீரமணி

லடிஸ் வீரமணி (இறப்பு: மே 5, 1995) இலங்கையில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் 'சலோமியின் சபதம்', 'மதமாற்றம்' என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார்.

நாடக உலகில்

தொகு

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிய ‘மனோரஞ்சித கான சபா’விலிருந்து வெளிவந்த கலைஞர்களில் முன்னோடி நடிகவேள் லடிஸ் வீரமணி ஆவார். 1945 இல் மல்லிகா என்ற நாடகத்தின் மூலம் தனது நாடகவுலக பிரவேசத்தை மேற்கொண்டார்.

1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் - மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக "நடிகவேள்" என்ற பட்டத்தை வழங்கினார் என். எஸ். கே.

ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ்செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ. ந. கந்தசாமி. அ. ந. கந்தசாமி எழுதிய ‘மத மாற்றம்’ என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ‘மதமாற்றத்தை’ சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி. அ. ந. கந்தசாமி மகாகவியிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார்.

83 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ‘கண்மணியாள்காதை’ என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார்.

இயக்கி நடித்த நாடகங்கள்

தொகு
  • தாய் நாட்டு எல்லையிலே
  • கங்காணியின் மகன்
  • நாடற்றவன்
  • சலோமியின் சபதம்
  • கலைஞனின் கனவு
  • மனிதர் எத்தனை உலகம் அத்தனை
  • ஊசியும் நூலும்

திரைப்படங்களில்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லடிஸ்_வீரமணி&oldid=3422546" இலிருந்து மீள்விக்கப்பட்டது