லதா மல்லிகார்ஜுன்

இந்திய அரசியல்வாதி

லதா மல்லிகார்ஜுன் (Latha Mallikarjun-பிறப்பு 1966) கருநாடகம் மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் விஜயநகர மாவட்டத்தில் உள்ள அரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 2023 கர்நாடகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார்.

பின்னணி

தொகு

மூத்த ஜனதா கட்சியின் தலைவரும், காங்கிரசு தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மறைந்த எம். பி. பிரகாசின் மகள் மல்லிகார்ஜுன் ஆவார்.[2] இவர் பாஜகவின் ஜி. கருணாகர ரெட்டியை 13,845 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, இவரது சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகளும் அரசியலில் சேர்ந்தனர். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த இவரது சகோதரர் எம். பி. இரவீந்திரரும் 2018இல்[4] இவரது இரண்டு சகோதரிகள் எம். பி. லதா மற்றும் எம். பி. வீணா ஆகியோர் காங்கிரசில் இருக்கும்போது, இவரது மற்றொரு சகோதரி எம். பி. சுமா பாஜகவில் இணைந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சி இவருக்கு போட்டியிட அனுமதி மறுத்ததால் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.[4][5] ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசு அரசுக்குத் தனது ஆதரவளித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Latha Mallikarjun, Karnataka Election (ಕರ್ನಾಟಕ ಚುನಾವಣಾ) 2023: Karnataka legislative assembly election (ಕರ್ನಾಟಕ ಚುನಾವಣಾ ಫಲಿತಾಂಶ) 2023 News, Videos, Photos Latest Update". News18 Kannada (in கன்னடம்). Retrieved 2024-03-08.
  2. "Harapanahalli independent MLA Latha Mallikarjun extends support to Congress in Karnataka". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-03-08.
  3. "Harapanahalli Election Results Live: Independent candidate Latha Mallikarjun beats BJP incumbent G Karunakara Reddy by 13,845 votes". CNBCTV18 (in ஆங்கிலம்). 2023-05-12. Retrieved 2024-03-08.
  4. 4.0 4.1 "Newly elected independent MLA from Karnataka's Harapanahalli extends support to Congress". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-05-14. Retrieved 2024-03-08.
  5. "Karnataka - Latha Mallikarjun: హస్తానికి జైకొట్టిన రెబల్‌ ఎమ్మెల్యే". EENADU (in தெலுங்கு). Retrieved 2024-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லதா_மல்லிகார்ஜுன்&oldid=3908374" இலிருந்து மீள்விக்கப்பட்டது