லயனல் ராபின்ஸ்
இலயனல் சார்லசு இராபின்சு, பிரபு இராபின்சு (Lionel Charles Robbins, Baron Robbins, பிரித்தானிய அகாதமி ஆய்வாளர், நவம்பர் 22, 1898 - மே 15, 1984) ஓர் பிரித்தானியப் பொருளியல் அறிஞரும் இலண்டன் பொருளாதாரப் பள்ளியின் பொருளாதாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிவரும் ஆவார். இவரது பொருளியல் குறித்த வரையறைக்காகவும் மார்சிலீயப் பாதையிலிருந்து ஆங்கில-சாக்சனியப் பொருளியலை மாற்றுவதில் இவரது பங்களிப்பிற்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.
சூலை 27, 1978இல் இலயனல் இராபின்சு கட்டிடம் திறக்கப்பட்டபோது | |
பிறப்பு | சிப்சன், மிடில்செக்சு | 22 நவம்பர் 1898
---|---|
இறப்பு | 15 மே 1984 இலண்டன் |
தேசியம் | பிரித்தானியர் |
நிறுவனம் | இலண்டன் பொருளாதாரப் பள்ளி |
கல்விமரபு | புதுச்செவ்வியல் பொருளியல் |
தாக்கம் | வில்லியம் ஜெவோன்சு, பிலிப்பு விக்குசுடீடு, லியோன் வால்ரசு, வில்பரேடோ பரேட்டோ, ஆய்கென் வொன் பொம் போவர்க், பிரெடிரிக் வொன் வீசர், நுட் விக்செல், ஆல்பிரடு மார்ஷல் |
தாக்கமுள்ளவர் | சார்லசு குட்ஹார்ட்டு, ஜான் ஹிக்ஸ் |
பங்களிப்புகள் | இராபின்சு அறிக்கை |