லயம் தாளத்தின் காலப் பிரமாணத்தை நிர்ணயிக்கும் அம்சம் ஆகும். அதாவது பாட்டின் காலப் பிரமாணத்திற்கேற்றவாறு சம அளவான வேகத்தில் தாளத்தின் அட்சரங்கள் விழுதலைக் குறிக்கும். தாளத்தை ஒரே காலப் பிரமாணத்திற்கமைய நடத்திச் செல்லுவது லயமாகும். சங்கீதத்தில் லயம் பிரதானமான இடத்தை வகிப்பதனால் இது "பிதா" எனப்படுகிறது. லயம் 3 வகைப் படும். அவையாவன:

  • விளம்பித லயம்
  • மத்திம லயம்
  • துரித லயம்

விளம்பித லயம் ஆறுதலாகத் (சௌக்கமாக) தாளம் போடுவதையும் துரித லயம் வேகமாகத் தாளம் போடுவதையும் குறிக்கும். இவை ஒவ்வொன்றும் மேலும் மும்மூன்றாகப் பிரிக்கப்பட்டு நுணுக்கமாகக் கணிக்கப் படுகிறன. அவையாவன:

  • விளம்பித விளம்பித லயம்
  • விளம்பித மத்திம லயம்
  • விளம்பித துரித லயம்
  • மத்திம விளம்பித லயம்
  • மத்திம மத்திம லயம்
  • மத்திம துரித லயம்
  • துரித விளம்பித லயம்
  • துரித மத்திம லயம்
  • துரித துரித லயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=லயம்&oldid=3752091" இலிருந்து மீள்விக்கப்பட்டது