லவ்டேல், இந்தியா

மலை வாழிடம்

லவ்டேல் (Lovedale) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மலையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமாகும். நீலகிரியில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக அமைந்துள்ள நகரங்களில் லவ்டேல் நகரமும் ஒன்றாகும். தற்போது நீலகிரியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் இந்நகரமும் இடம் பிடிக்கிறது.

லவ்டேல் இரயில் நிலையம்
லவ்டேல் இரயில் சந்திப்பு

அருகாமையிலுள்ள பெரிய நகரங்கள் தொகு

  • ஊட்டி (5 கி.மீ தொலைவு). லவ்டேலிலிருந்து ஒரே 5 கிலோமீட்டர் தொலைவில் மலைகளின் அரசி.
  • குன்னூர் (16 கி.மீ)
  • வெல்லிங்க்டன்

மக்கள்தொகை தொகு

லவ்டேலின் நிலையான மக்கள்தொகை 1000 முதல் 1500 மக்கள் ஆவர். லாரன்சு பள்லியில் தங்கிப்படிப்பவர்களையும் சேர்த்துக் கொண்டால் இத்தொகை மேலும் 1000 அதிகரிக்கும்.

நிறுவனங்கள் தொகு

லாரன்சு பள்ளி ஓர் உண்டு உறைவிடப் பள்ளியாகும். லவ்டேல் நகரில் ஒரு காவல் நிலையம் உள்ளது. இது லவ்டேல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை கண்காணிக்கிறது. இதைத்தவிர ஒரு சிறிய அஞ்சல் நிலையம் மற்றும் பாரத மாநிலவங்கிக் கிளை ஆகிய அலுவலகங்கள் இங்கு உள்ளன. இவையிரண்டு அலுவலகங்களும் லாரன்சு பள்ளிக்காக இயங்குபவையாகும்.

கல்வி நிறுவன்ங்கள் தொகு

  • லாரன்சு பள்ளி, லவ்டேல்
  • புனித அந்தோனி உயர்நிலைப் பள்ளி, லவ்டேல்
  • நீலகிரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, லவ்டேல்

காலநிலை தொகு

கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் லவ்டேல் மிதவெப்ப மண்டல உயர்மேட்டு நில காலநிலை நகரமாக வகைப்படுத்தப்படுகிறது. ஊட்டியும் லவ்டேலும் நீலகிரி மலையின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த பகுதியில் லவ்டேல் அமைந்திருப்பதால் தெற்கு ஆசியாவின் இரண்டு பருவக்காற்று காலங்களிலும் மழையைப் பெறுகிறது. சனவரி முதல் மார்ச்சு வரை உலர் காற்றும் ஏப்ரல் முதம் டிசம்பர் வரை ஈரக் காற்றும் இங்கு வீசுகின்றன. உலர் மற்றும் ஈரக் காற்று காலங்களுக்கு இடையில் காணப்படும் பனிப்பொழிவின் வ்த்தியாசம் 345 மில்லி மீட்டர்கள் ஆகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலை 42 பாகை செல்சியசு வரை மாறுபடுகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், லவ்டேல்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 19.0
(66.2)
19.9
(67.8)
21.8
(71.2)
22.1
(71.8)
21.8
(71.2)
18.3
(64.9)
17.0
(62.6)
17.8
(64)
18.9
(66)
18.9
(66)
18.7
(65.7)
18.8
(65.8)
19.42
(66.95)
தினசரி சராசரி °C (°F) 12.4
(54.3)
13.5
(56.3)
15.3
(59.5)
16.3
(61.3)
16.6
(61.9)
14.8
(58.6)
14.1
(57.4)
14.4
(57.9)
14.5
(58.1)
14.6
(58.3)
13.7
(56.7)
13.0
(55.4)
14.43
(57.98)
தாழ் சராசரி °C (°F) 5.4
(41.7)
6.6
(43.9)
8.8
(47.8)
10.6
(51.1)
11.5
(52.7)
11.4
(52.5)
11.3
(52.3)
11.2
(52.2)
10.7
(51.3)
10.4
(50.7)
8.7
(47.7)
6.6
(43.9)
9.43
(48.98)
பொழிவு mm (inches) 23.5
(0.925)
21.2
(0.835)
38.3
(1.508)
109.4
(4.307)
160.5
(6.319)
206.1
(8.114)
366.2
(14.417)
253.6
(9.984)
204.2
(8.039)
263.3
(10.366)
177.3
(6.98)
77.7
(3.059)
1,901.3
(74.854)
சராசரி மழை நாட்கள் 2 2 3 8 10 13 16 14 10 15 10 7 103
ஆதாரம்: Climate-Data.org[1]

மின்சாரக் கனவு திரைப்படத்தின் இறுதிக்காட்சி இங்குதான் திரைப்படமாக்கப்பட்டது.

போக்குவரத்து தொகு

  • தொடருந்து வழி: மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் நீலகிரி மலை இரயில் லவ்டேல் வழியாகச் செல்கிறது. இப்பாதையில் உள்ள மிக உயர்ந்த இரயில் நிலையம் லவ்டேல் இரயில் நிலையமாகும். மேட்டுப்பாளைத்திலிருந்து இரண்டாவது கடைசி இரயில் நிலையம் லவ்டேல் இரயில் நிலையம் ஆகும்.
  • சாலை வழி: ஊட்டியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் லவ்டேல் அமைந்துள்ளது. வாடகைக் கார் அல்லது பேருந்தில் லவ்டேலை எளிதாக அடையலாம்.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "limate: Lovedale - Climate graph, Temperature graph, Climate table - Climate-Data.org". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2015-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லவ்டேல்,_இந்தியா&oldid=2726854" இலிருந்து மீள்விக்கப்பட்டது