லாகூர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், ஏப்ரல் 2017
பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் 5 ஏப்ரல் 2017 அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் மக்கட்த்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள், பணியில் இல்லாத வான்படை வீரர் உட்பட ஆறு பேர் மரணமடைந்தனர்,[1] 18 பேர் காயமடைந்தனர்[2].
லாகூர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல், ஏப்ரல் 2017 | |
---|---|
இடம் | லாகூர்,பாக்கிஸ்தான் |
நாள் | 5 ஏப்ரல் 2017 |
தாக்குதல் வகை | தற்கொலை குண்டு வெடிப்பு |
ஆயுதம் | தற்கொலை வெடிகுண்டு |
இறப்பு(கள்) | 6 (+1தாக்குதலாளி) |
காயமடைந்தோர் | 18 |
தாக்கியோர் | பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் |
தாக்குதல்
தொகுஇராணுவ வாகனத்தின் அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளது. மேலும் பாக்கிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.