லாத்வியா தேசிய தாவரவியல் பூங்கா

லாத்வியா தேசிய தாவரவியல் பூங்கா (National Botanic Garden of Latvia) லாத்வியா நாட்டின் சலாசுபில்சு நகரத்தில் அமைந்துள்ள ஒரு தாவரவியல் பூங்காவாகும். பால்டிக் நாடுகளில் காணப்படும் பெரிய தாவரவியல் பூங்காங்களில் இதுவும் ஒன்றாகும்.

லாத்வியா தேசிய தாவரவியல் பூங்கா
National Botanic Garden of Latvia
Map
வகைதாவரவியல் பூங்கா
அமைவிடம்லாத்வியா
ஆள்கூறு56°51′49.6″N 24°21′30″E / 56.863778°N 24.35833°E / 56.863778; 24.35833
பரப்பளவுcirca 130 எக்டேர்கள் (320 ஏக்கர்கள்)
உருவாக்கம்1956 (1956)
திறந்துள்ள நேரம்ஆம்

வரலாறு

தொகு

லாத்வியா தேசிய தாவரவியல் பூங்கா 956 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது என்றாலும் ஆனால் வரலாற்றை பின்னோக்கினால் இது 1836 ஆம் ஆண்டிலேயே இருந்த்தாக அறியமுடிகிறது. கிறிசுடியன் வில்லெம் சுகோச் ஸ்சோச் என்பவர் ஒரு வணிக நாற்றங்காலாக இதை தொடங்கியுள்ளார். பிற்காலத்தில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக இப்பூங்கா சலாசுபில்சு நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பால்டிக் நாடுகளில் ஒரு மிகப்பெரிய பூங்காவாக கருதப்பட்டது. 1944 ஆம் ஆண்டு பின்பு நாட்டுடமைப் பரிசோதனைப் பூங்காவாக மாற்றப்பட்டு பின்னர் 1956 ஆம் ஆண்டு முதல் லாத்வியாவின் அறிவியல் அகாடமி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது [1].

தாவரவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் மற்றும் அலங்காரத் தாவரங்களை வளர்த்தல், தாவரங்கள் சேகரித்தல், அவற்றை அறிமுகப்படுத்துதல், தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய ஆராய்ச்சி, இத்தகைய ஆராய்ச்சி முடிவுகளை பரவலாக்கம் செய்தல் போன்றவை லாத்வியா தேசிய தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டதன் நோக்கங்கள் ஆகும் [1]. இந்த பூங்கா 130 எக்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது [1][2].14 ,௦௦௦ வகையான தாவரங்களும் குறிப்பாக 5000 மரங்களும் 1400 சிர்கா பசுமை வீடுகளுக்குகந்த தாவரங்களும் இங்கு உள்ளடங்கியுள்ளன [2][3]. அறிவியல் பயன்பாட்டைத் தவிர்த்து ஒரு பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவும் இப்பூங்கா திகழ்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "History". National Botanic Garden of Latvia. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.
  2. 2.0 2.1 "National Botanic Garden of Latvia". Botanic Gardens Conservation International.
  3. "WELCOME TO NATIONAL BOTANIC GARDEN". National Botanic Garden of Latvia. பார்க்கப்பட்ட நாள் 16 February 2017.