லான்சரேத் முகடு சண்டை

லான்சரேத் முகடு சண்டை (Battle of Lanzareth ridge) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் அமெரிக்கப் படையின் கண்காணிப்பாளர்களின் சிறு குழு ஒன்று நாசி ஜெர்மனியின் வான்குடை வீரர்களை ஒரு நாள்முழுவதும் தடுத்து தாமதப்படுத்தியது.

லான்சரேத் முகடு சண்டை
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி
நாள் 16–17 டிசம்பர், 1944
இடம் லான்சரேத் அருகில், பெல்ஜியம்
ஜெர்மானிய வெற்றி, பல்ஜ் தாக்குதல் தொடர்ந்தது
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
வால்டர் ஈ. லார்
லைல் பொக்
செப்ப் டயட்ரிக்
கர்னல் ஜி. வான் ஹோஃப்மான்
பலம்
உளவு மற்றும் களநோட்ட பிளாட்டூன், 394வது ரெஜிமண்ட், 99வது அமெரிக்க தரைப்படை டிவிசன் (18 பேர்);
முன்னணி கண்காணிப்பாளர் குழு, சி பீரங்கிக் குழும்ம, 371வது கள பீரங்கிப் பிரிவு (4 பேர்)
1வது பட்டாலியன், 9வது வான்குடை ரெஜிமண்ட், 3வது வான்குடை டிவிசன் (500 பேர்);
27வது ஃபுசிலியர் ரெஜிமண்ட், 12வது தரைப்படை டிவிசன் (50 பேர்)
இழப்புகள்
1 (மாண்டவர்)
14 (காயமடைந்தவர்)
20 (போர்க்கைதிகள்)
16 (மாண்டவர்)
63 (காயமடைந்தவர்)
13 (காணாமல் போனவர்)

டிசம்பர் 16, 1944 அதிகாலையில் ஜெர்மனியின் பல்ஜ் தாக்குதல் தொடங்கியது. தரைப்படைகளுக்கு முன்னேறும் பாதைகளில் உள்ள முக்கியமான இடங்களைக் கைப்பற்ற ஜெர்மானிய வான்குடை வீரர்கள் அனுப்பப்பட்டனர். பல்ஜ் போர்க்களத்தின் வடமுனையிலிருந்த பெல்ஜியத்தின் லான்சரேத் முகட்டை சுமார் 500 வான்குடை வீரர்கள் கைப்பற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த இரு அமெரிக்க கள நோட்ட (reconnaissance) பிளாட்டூன்களும், ஒரு பீரங்கி கண்காணிப்பாளர் குழுவும் ஜெர்மானியர்களை எதிர்த்துத் தாக்கினர். எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் அமெரிக்க வீரர்கள் ஜெர்மானியத் தாக்குதலைச் சமாளித்தனர். டிசம்பர் 16ம் தேதி மாலையில் தான் ஜெர்மானியர்களால் லான்சரேத் முகட்டைக் கைப்பற்ற முடிந்தது. லான்சரேத் முகட்டிலிருந்த அமெரிக்கப் படைவீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். அமெரிக்கர்கள்களின் இந்த எதிர்பாராத எதிர்ப்பால் பல்ஜ் தாக்குதலின் வடகளத்திற்கான ஜெர்மானிய கால அட்டவணை 20 மணி நேரம் தாமதமாகியது. இக்காலதாமதம் பல்ஜ் தாக்குதல் தோல்வியடைவிதில் சிறு பங்கு வகித்தது.

லான்சரேத் முகட்டு சண்டை நெடு நாட்களுக்குப் பிரபலமடையாமல் இருந்தது. போர் முடிந்து பல வருடங்கள் கழித்து இச்சண்டையில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கிய லெப்டினப்ட் லைல் பொக்கின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, இதில் பங்கேற்ற அமெரிக்க வீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பல்ஜ் தாக்குதலில் ஜெர்மானிய கவசப் படைகளை 20 மணி நேரம் தாமதப் படுத்தியவர்கள் அவர்கள் தான் என்றும் அதிகாரபூர்வ ஆவணங்களில் அங்கீகாரம் கிட்டியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லான்சரேத்_முகடு_சண்டை&oldid=2917245" இலிருந்து மீள்விக்கப்பட்டது