லான்ட்ராய்டு
லான்ட்ராய்டு (Laundroid)
என்பது வீட்டு உபயோகப் பொருளான துணிதுவைக்கும் ரோபோ ஆகும். இது தானகவே துணியைத் துவைத்து,உலர்த்தி, மடித்து தரும் ரோபோ ஆகும். இது முதன்முதலில் டோக்கியோவில் சீடெக் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி காண்பிக்கப்பட்டது. தைவா, பேனசோனிக், செவன் ட்ரீமர்ஸ் ஆகிய நிறுவனங்களால் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு துணியினையும் துவைத்து, உலர்த்தி, மடிக்க மூன்று முதல் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. இது ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விற்பனை 2017 மார்ச் முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவானது துணிகளை மடிப்பதற்கு மட்டும் பயன்படும் வகையில் இருந்தது. முழுமையாக்கப்பட்ட ரோபோவானது துணிகளைத் துவைத்து, உலர்த்தி விரும்பும் வகையில் மடித்து தரும் வகையில் 2019 -ல் வெளியாக உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Craine, Tatiana. "Laundroid, the Laundry-Folding Robot, Is Your New Favorite Time-Saving Invention". Inverse.
- ↑ Heater, Brian. "And Then There's Laundroid, The Laundry Folding Robot". Tech Times.
- ↑ McGrath, Jenny. "Laundry-folding robot may take hours, but at least you don't have to fold laundry". Digital Trends.