லாப்டேவ் கடல்

லாப்டேவ் கடல் (The Laptev Sea) (உருசியம்: мо́ре Ла́птевых, ஒ.பெ more Laptevykh; Yakut: Лаптевтар байҕаллара) ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லையோரக் கடல் ஆகும். இக்கடல் சைபீரியாவின் வடக்குக் கடற்கரைக்கும் டைமிர் தீபகற்பம். செவெர்னயா செம்ல்யா மற்றும் புதிய சைபீரியத் தீவுகள் ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ளது. இக்கடலின் வடக்கு எல்லையானது ஆர்க்டிக் முனையிலிருந்து  79°N மற்றும் 139°E என்ற ஆயத்தொலைவுகள் உள்ள புள்ளிக்கும் மற்றும் அனிசி முனை வரையில் செல்லும். காரா கடல் மேற்கிலும், கிழக்கில் கிழக்கு சைபீரியக் கடலும் காணப்படுகிறது.

லாப்டேவ் கடல்
ஆள்கூறுகள்76°16′7″N 125°38′23″E / 76.26861°N 125.63972°E / 76.26861; 125.63972
வகைகடல்
வடிநில நாடுகள்உருசியா
மேற்பரப்பளவு700,000 km2 (270,000 sq mi)
சராசரி ஆழம்578 m (1,896 அடி)
அதிகபட்ச ஆழம்3,385 m (11,106 அடி)
நீர்க் கனவளவு403,000 km3 (3.27×1011 acre⋅ft)
மேற்கோள்கள்[1][2][3]

உருசிய தேடலாய்வாளர்கள் டிமிட்ரி லாப்டேவ் மற்றும் காரிடன் லாப்டேவ் ஆகியோரின் பெயரில் இந்தக் கடலானது அழைக்கப்படுகிறது; முன்னதாக, இக்கடலானது பலவிதமான பெயர்களால் அழைக்கப்பட்டது. இறுதியாக இக்கடலின் பெயர், தேடலாய்வாளர் அடால்ப் எரிக் நார்டென்ஸ்கியோட் என்பவரின் பெயரால்   நார்டென்ஸ்கியோட் கடல் (உருசியம்: мо́ре Норденшёльда) என அழைக்கப்பட்டது. இந்தக் கடலானது, 0° செல்சியசிற்கும் (32 °பாரன்ஹீட்) குறைவான கடுமையான காலநிலையை ஓராண்டில் 9 மாதங்களுக்கும் மேலாகக் கொண்டுள்ளது. குறைவான உவர்ப்புத்தன்மை, குறைவான உயிரின எண்ணிக்கை, குறைவான மக்கள் தொகை மற்றும் 50 மீட்டருக்கும் குறைவான ஆழம் போன்ற பல நெருக்கடியான சூழலைக் கொண்டுள்ளது. பெரும்பாலான காலங்களில் (ஆகத்து, செப்டம்பர் மாதங்களைத் தவிர) உறைந்த நிலையிலேயே காணப்படுகிறது.  

இக்கடற்ரையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யுகாகிர், ஏவன்கள் மற்றும் ஏவென்குகள் போன்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இந்தப் பழங்குடியின மக்கள், மீன் பிடித்தல், வேட்டையாடுதல் மற்றும் மான் வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர். இந்தப் பழங்குடியின மக்கள் முதலில் யாகுட்சுகளாலும், பின்னர் ரஷ்யர்களாலும் இடம் பெயரச் செய்யப்பட்டனர். உருசிய கண்டுபிடிப்பாளர்கள் 17 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை கண்டறியத் தொடங்கினார்கள். அவர்கள் தெற்கிலிருந்து இக்கடலில் சங்கமிக்கும் பல பெரிய ஆறுகளான லேனா நதி, காடங்கா, அனாபார், ஓலென்யோக், ஓமோலோய் மற்றும் யானா ஆகியவற்றின் வழியாக இக்கடற்பகுதியை அடைந்தனர். இக்கடலானது பல பன்னிரண்டின் தொகுதிகளான எண்ணிக்கையில் தீவுகளைக் கொண்டுள்ளன. 

இப்பகுதியில் முதன்மையான மனித நடவடிக்கைகள் சுரங்கத் தொழில், வடக்கு கடல்வழிப் பாதையின் வழியாக  நீர்வழிப் போக்குவரத்து, மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்றவையாக உள்ளன; இத்தொழில்கள் எவையும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த அளவிற்கு நடைபெறுவதில்லை. இப்பகுதியின் மிகப்பெரிய மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதி டிக்சி துறைமுகமாகும்.

பரப்பெல்லை

தொகு
 
சர்வதேச நீரியல் பரப்பு நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட லாப்டேவ் கடலின் எல்லைகள்

சர்வதேச நீரியல் பரப்பு நிறுவனம் (International Hydrographic Organization) லாப்டேவ் கடலின் எல்லைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது:[4]

மேற்கில்: காரா கடலின் கிழக்கு எல்லை , ஆர்க்டிக் முனையிலிருந்து தென்கிழக்கு முனை வரையிலான கோம்சோமோலெட்சு தீவுகள் ; tஅந்த இடத்திலிருந்து வோரோசிலோவ் முனைக்கு, அக்டோபர் புரட்சித் தீவிலிருந்து அனூசின் முனைக்கு. பின்னர் போல்ஷிவிக் தீவில் அன்ஸ்லிச் முனைக்கு, போல்ஷிவிக் தீவிலிருந்து யெவ்கேனோவ் முனைக்கு. அங்கிருந்து முதன்மையான நிலத்தில் ப்ரோன்சிஸ்தேவ் முனைக்கு (பார்க்க உருசியன் அட்டவணை எண். 1484 (1935 ஆம் ஆண்டுக்கானது)].

வடக்கில்: மோலோடோவ் முனையிலிருந்து, கோடெனி தீவின் வடக்கு எல்லையைச் சேர்க்கும் கோடு (76°10′N 138°50′E).

கிழக்கில்: கோட்னி தீவின் வடக்குப் புறத்திலிருந்து - கோட்னி தீவு வழியாக மாட்வேஜ்யி முனை வரை. பின்னர் மால்யி தீவு [லிட்டில் லாகோவ்ஸ்கி தீவு] வழியாக, பெரிய லியாகோவ் தீவில் வாகுய்ன் முனைக்கு, அங்கிருந்து பிரதான நிலத்தில் சவிட்டாய் நோஸ்நொ முனைக்கு.

மேற்கோள்கள்

தொகு
  1. Laptev Sea, Great Soviet Encyclopedia (in Russian)
  2. Laptev Sea, Encyclopædia Britannica on-line
  3. A. D. Dobrovolskyi and B. S. Zalogin Seas of USSR. Laptev Sea, Moscow University (1982) (in Russian)
  4. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாப்டேவ்_கடல்&oldid=3570177" இலிருந்து மீள்விக்கப்பட்டது