லாப்ரடோர்

லாப்ரடோர் (Labrador) கனடாவின் நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் வட பகுதியில் அமைந்துள்ள மண்டலமாகும். இம்மாகாணத்தின் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள லாப்ரடோர், நியூபவுண்ட்லாந்திடமிருந்து பெல் ஐல் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. அத்திலாந்திக்கு கனடாவின் வடகோடியில் அமைந்துள்ள பெரிய புவியியல் பகுதியாகவும் விளங்குகின்றது.

லாப்ரடோர்
மண்டலம்
லாப்ரடோர்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: மூனுசு இசுப்லென்டிடும் மோக்சு எக்சுப்லெபிடுர்  (இலத்தீன்)
"நமது சிறப்பான பணி விரைவில் நிறைவுறும்"
Labrador-Region.PNG
நாடு கனடா
மாகாணம்நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்
நிர். தலைமையகம்ஹேப்பி வேல்லி-கூசு விரிகுடா
பெரிய நகரம்லாப்ரடோர் நகரம்[1]
அரசு
 • வகைநியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் அரசு
www.gov.nl.ca
 • கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்1
 • நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர் சட்டப்பேரவை உறுப்பினர்கள்4
பரப்பளவு
 • மொத்தம்2,94,330
 • நீர்31,340  4%
உயர் புள்ளி
(மவுண்ட் கோப்விக்)
1,652
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்26,728
 • அடர்த்தி0.09
கடற்கரை7,886 km (4,900 mi)
நீளமான ஆறுகிராண்டு ஆறு (நியூபவுண்ட்லாந்து பெயர்: சர்ச்சில் ஆறு)
(856 km, 532 mi)

லாப்ரடோர் மூவலந்தீவின் கிழக்குப் பகுதியில் லாப்ரடோர் அமைந்துள்ளது. இதன் மேற்கிலும் தெற்கிலும் கியூபெக் மாகாணம் உள்ளது. கனடியப் பகுதியான நூனவுட்டுடன் கில்லினிக் தீவு மூலமாக சிறு எல்லையைப் பகிர்ந்துள்ளது.

லாப்ரடோரின் பரப்பளவு நியூபவுண்ட்லாந்து தீவின் பரப்பை விட இருமடங்காக இருந்தபோதிலும் இங்கு மாகாணத்தின் 8% மக்களே வசிக்கின்றனர். லாப்ரடோரின் முதற்குடி மக்களாக வடக்கு இனுவிட்டுகளும் தெற்கு இனுவிட்டு-மெடிசுகளும் இன்னு இனத்தவரும் உள்ளனர். 1940களிலும் 1950களிலும் இங்குள்ள இயற்கை வளங்கள் அறியப்படும்வரை முதற்குடி அல்லாதவர்கள் லாப்ரடோரில் தங்கி வாழ்ந்ததில்லை.

மேற்சான்றுகள்தொகு

  1. "Statistics Canada, 2011 Census of Population.". Statistics Canada (24 October 2012). பார்த்த நாள் 20 March 2014.
  2. "Statistics Canada. 2011 Census.". GeoSearch. (2012). பார்த்த நாள் 27 February 2016.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாப்ரடோர்&oldid=2037589" இருந்து மீள்விக்கப்பட்டது