லாரன்சு லேசான்
லாரன்சு லேசான் (Lawrence LeShan செப்டம்பர் 6 1920) என்பவர் அமெரிக்க உளவியலாளர், கல்வியாளர், நூலாசிரியர் ஆவார். நியூயார்க்கில் வாழ்ந்து வரும் இவர் தியானம் செய்வது எப்படி என்னும் நூலை எழுதிப் புகழ் அடைந்தார்.
அந் நூல் மட்டுமல்லாமல் உளவியல் மருத்துவம், புற்றுநோய் சிகிச்சை, போர் மற்றும் மாயாவாதம் ஆகிய தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார்.[1] உடலையும் மனத்தையும் பக்குவமாக வைத்திருந்து புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த முடியும் அதற்கான மனவியல் சிகிச்சை முறைகளைத் தம் நூல்களில் எழுதியுள்ளார்.[2]
சிக்காகோ பல்கலைக் கழகத்தில் பயின்று மனித வளர்ச்சி என்னும் பொருண்மையில் ஆய்வுப் பட்டம் பெற்றார். ரூஸ்வெல்ட் பல்கலைக் கழக பேஸ் கல்லூரியிலும், சமூக ஆராய்ச்சி புதிய பள்ளி என்பதிலும் ஆசிரியராகப் பணி செய்தார்.
எட்வார்ட் கிரெண்டான் என்ற புனைபெயரில் அறிவியல் கற்பனைக் கதையும் எழுதியுள்ளார்.