இலாரன்சு விசை
என்பது மின்காந்தப் புலத்தால் ஒரு புள்ளி மின்துகளின் (மின்னூட்டம்) மீது செலுத்தப்படும் விசை ஆக
(லாரன்சு விசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இயற்பியலில், இலாரன்சு விசை என்பது மின்காந்தப் புலத்தால் ஒரு புள்ளி மின்துகளின் (மின்னூட்டம்) மீது செலுத்தப்படும் விசை ஆகும் . இவ்விசை பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்[1]
- F = q (E + v × B)
இதில்,
- F - விசை (நியூட்டன்)
- E - மின்புலம் (வோல்ட்டு/மீட்டர்)
- B - காந்தப் புலம் (தெசுலா)
- q - துகளின் மின்மம் (கூலும்)
- v - துகளின் திசைவேகம் (மீட்டர்/நொடி)
இவ்விசையின் சிறப்பியல்புகள் பின்வருமாறு:
- மின்துகள் ஓய்வு நிலையில் இருந்தால் விசை சுழியாகும். அதாவது இயங்கும் துகள்கள் மட்டுமே, லாரன்சு விசையை உணரும்.
- மின்துகளானது, காந்தப் புலத்திற்கு இணையாகவோ அல்லது எதிராகவோ இயங்கினால் செயல்படும் விசை சுழியாகும்; காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக இயங்கினால், விசையானது பெரும மதிப்பினைப் பெறும்.
- விசையானது மின்னூட்டத்திற்கு (q) நேர்விகிதத்திலும்
- விசையானது காந்தத் தூண்டலுக்கு (B) நேர்விகிதத்திலும்
- விசையானது காந்தத் தூண்டலுக்கு குத்தாக உள்ள திசைவேகக் கூறுக்கு (v sinθ) நேர்விகிதத்திலும்
- எதிர்க்குறி மின்னூட்டங்களுக்கு, இவ்விசை எதிரான திசையிலும் செயல்படும்
மேற்கோள்கள்
தொகு- ↑ Jackson, John David (1999). Classical electrodynamics (3rd ed.). New York, [NY.]: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-30932-X.