லாரோ மொஸ்கார்டினி

இலாரோ மொசுகார்தினி (Lauro Moscardini) (பிறப்புஃ அக்டோபர் 30,1961) ஒரு இத்தாலிய வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். காசியனல்லாத தொடக்க நிலைமைகளுடன் N - பொருள் அண்டவியல் உருவகப்படுத்துதல்களை மொசுகார்தினி ஆய்வு செய்துள்ளார். இவரது ஆராய்ச்சி செயல்பாடு முதன்மையாக கோட்பாட்டு, நோக்கீட்டு அண்டவியல் துறையில் கவனம் செலுத்துகிறது , குறிப்பாக வானியற்பியலில் எண் நுட்பங்களைப் பயன்படுத்துதல், பேரியல் அண்ட கட்டமைப்புகளின் உருவாக்கம் பற்றிய ஆய்வுகளில். மொசுகார்தினியின் ஆராய்ச்சி ஈடுபடுகிறது. இது அண்டப் பேரியல் கட்டமைப்புகளின் நோக்கீடுகளும் படிமங்களின் உருவாக்கமும் கலந்த கலவையாகும்.

இலாரோ மொசுகார்தினிL
auro Moscardini
பிறப்பு 30 அக்டோபர் 1961 (1961-10-30) (அகவை 63)
எமிலியா பகுதி, இத்தாலி
குடியுரிமைஇத்தாலியர்
Alma materபொலோகுனா பல்கலைக்கழகம்

வாழ்க்கை

தொகு

மொசுகார்தினி 1961 அக்டோபர் 30 அன்று இத்தாலியின் எமிலியா பகுதியில் பிறந்தார். 1986 ஆம் ஆண்டில் இலாரியா பட்டமும் , 1989 ஆம் ஆண்டில் போலோக்னா பல்கலைக்கழகத்தில் வானியலில் (காசியன் அல்லாத தொடக்க நிலைமைகளுடன் அண்டவியல் என் - பொருள் உருவகப்படுத்துதல்கள்) முனைவர் பட்டமும் பெற்றார். மொசுகார்தினி 1990 முதல் 1991 வரை பிரைட்டன் பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வுப் பணியைச் செய்தார். 1991 முதல் படோவா பல்கலைக்கழகத்தின் வானியல் துறையில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். பாவியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் குறித்த பாடத்திட்டத்தை மொசுகார்தினி கற்பித்தார். நவம்பர் 2002 இல் மொசுகார்தினி போலோக்னா பல்கலைக்கழகத்தின் வானியல் துறையில் இணை பேராசிரியராகவும் பிறகு 2016 செப்டம்பரில் முழு பேராசிரியராகவும் அமர்த்தப்பட்டார். அவர் 50 எச் - சுட்டுகளைக் கொண்டுள்ளார். மேலும்ம் 8000 க்கும் மேற்பட்ட மேற்கோள்களைக் கொண்டுள்ளார்.

ஆராய்ச்சி

தொகு

இலாரோ மொசுகார்தினி இருநூறுக்கும் மேற்பட்ட பரிந்துரைக்கப்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளின் சிறந்த ஆராய்ச்சியாளரும் இணை ஆசிரியரும் ஆவார்.[1] பெரிய அளவிலான கட்டமைப்பு உருவாக்கத் துறையில் , குறிப்பாக உயர் செம்பெயர்ச்சி பால்வெளிக் கொத்தின் படிமத்தை உருவாக்குவதில் இவர் முத்ன்மைப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.[2]

மொசுகார்தினி பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினராக பல்வேறு பிரிவுகளில் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

  • பிரிவு B வசதிகள் தொழில்நுட்பங்கள், தரவு அறிவியல் உறுப்பினர்
  • பிரிவு டி உயர் ஆற்றல் நிகழ்வு, அடிப்படை இயற்பியல் உறுப்பினர்
  • பிரிவு ஜே பால்வெளிகள், மற்றும் அண்டவியல் உறுப்பினர்
  • உறுப்பினர் , ஆணையம் B1 கணிப்பு வானியற்பியல்
  • இடை - பிரிவு B - H - J ஆணையத்தின் இடை - பால்வெளி ஊடக உறுப்பினர்
  • குறுக்குப் பிரிவு டி - ஜே ஆணையத்தின் உறுப்பினர், மீப்பொருண்மைக் கருந்துளை, பால்வெளிப் படிமலர்ச்சி

பன்னாட்டு வானியல் ஒன்றியத்துக்குள் கடந்தகால இணைப்பு

  • பிரிவு VIII பால்வெளிகளும் அண்டமும் முன்னாள் உறுப்பினர் (2012 வரை)
  • 47 அண்டவியல் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் (2015 வரை)

சில வெளியீடுகள்

தொகு
 
ESO இன் மிகப் பெரிய தொலைநோக்கியில் (VLT) உள்ள VIMOS கருவியில் இருந்து இந்த படத்தில் இரண்டு சுழல் விண்மீன் திரள்கள் ஒரு ஸ்பெல்பைண்டிங் சுழலும் நடனத்தில் பூட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு விண்மீன் திரள்களும் - NGC 5426 மற்றும் NGC 5427 - இணைந்து Arp 271 என்ற ஒரு சுவாரஸ்யமான வானியல் பொருளை உருவாக்குகின்றன - இது 24 மார்ச் 2018 அன்று VIMOS ஆல் கைப்பற்றப்பட்ட இறுதிப் படமாகும்.
  • Fast weak-lensing simulations with halo model; Carlo Giocoli, Sandra Di Meo, Massimo Meneghetti, Eric Jullo, Sylvain de la Torre, Lauro Moscardini, Marco Baldi, Pasquale Mazzotta, R. Benton Metcalf; Monthly Notices of the Royal Astronomical Society; 10 Jan 2017, last revised 5 Jun 2017, 470, pp. 3574 - 3590; arXiv:1701.02739
  • AMICO: optimised detection of galaxy clusters in photometric surveys; Bellagamba, Fabio; Roncarelli, Mauro; Maturi, Matteo; Moscardini, Lauro; Monthly Notices of the Royal Astronomical Society; 16 October 2017, 473, pp. 5221 - 5236; arXiv:1705.03029
  • Probing primordial features with next-generation photometric and radio surveys; Mario Ballardini, Fabio Finelli, Roy Maartens, Lauro Moscardini; Journal of Cosmology and Astroparticle Physics; 20 Dec 2017 (v1), last revised 4 Apr 2018; arXiv:1712.07425
  • Searching for galaxy clusters in the Kilo-Degree Survey; M. Radovich, E. Puddu, F. Bellagamba, M. Roncarelli, L. Moscardini, S.Bardelli, A. Grado, F. Getman, M. Maturi, Z. Huang, N. Napolitano, J. McFarland, E. Valentijn, M. Bilicki; Astronomy & Astrophysics; 11 Jan 2017, 598, pp. A107 - A118; arXiv:1701.02954
  • The XXL Survey: XXXII. Spatial clustering of the XXL-S AGN; M. Plionis, L.Koutoulidis, E. Koulouridis, L. Moscardini, C. Lidman, M. Pierre, C. Adami, L. Chiappetti, L. Faccioli, S. Fotopoulou, F. Pacaud, S. Paltani; Astronomy & Astrophysics; 17 Apr 2018; arXiv:1804.06409
  • Weak-lensing peaks in simulated light cones: Investigating the coupling between dark matter and dark energy; Carlo Giocoli, Lauro Moscardini, Marco Baldi, Massimo Meneghetti, Robert B. Metcalf; Monthly Notices of the Royal Astronomical Society; 17 May 2018, 478, pp. 5436 - 5448; arXiv:1801.01886
  • The VIMOS Public Extragalactic Redshift Survey (VIPERS): The complexity of galaxy populations at 0.4 < z < 1.3 revealed with unsupervised machine-learning algorithms; M. Siudek, K. Małek, A. Pollo, T. Krakowski, A. Iovino, M. Scodeggio, T. Moutard, G. Zamorani, L. Guzzo, B. Garilli, B. R. Granett, M. Bolzonella, S. de la Torre, U. Abbas, C. Adami, D. Bottini, A. Cappi, O. Cucciati, I. Davidzon, P. Franzetti, A. Fritz, J. Krywult, V. Le Brun, O. Le Fèvre, D. Maccagni, F. Marulli, M. Polletta, L.A.M. Tasca, R. Tojeiro, D. Vergani, A. Zanichelli, S. Arnouts, J. Bel, E. Branchini, J. Coupon, G. De Lucia, O. Ilbert, C. P. Haines, L. Moscardini, T. T. Takeuchi; Astronomy &amp; Astrophysics; 24 May 2018, last revised 18 Dec 2018; arXiv:1805.09904
  • Weak lensing light-cones in modified gravity simulations with and without massive neutrinos; Carlo Giocoli, Marco Baldi, Lauro Moscardini; Monthly Notices of the Royal Astronomical Society; 12 Jun 2018 (v1), last revised 6 Sep 2018; arXiv:1806.04681
  • Gravitational lensing detection of an extremely dense environment around a galaxy cluster; Mauro Sereno, Carlo Giocoli, Luca Izzo, Federico Marulli, Alfonso Veropalumbo, Stefano Ettori, Lauro Moscardini, Giovanni Covone, Antonio Ferragamo, Rafael Barrena, Alina Streblyanska; Nature Astronomy; 9 July 2018, 2, pp. 744 - 750; arXiv:1807.04277
  • The XXL Survey: XVI. The clustering of X-ray selected galaxy clusters at z ∼ 0.3; F. Marulli, A. Veropalumbo, M. Sereno, L. Moscardini, F. Pacaud, M. Pierre, M. Plionis, A. Cappi, C. Adami, S. Alis, B. Altieri, M. Birkinshaw, S. Ettori, L. Faccioli, F. Gastaldello, E. Koulouridis, C. Lidman, J.-P. Le Fèvre, S. Maurogordato, B. Poggianti, E. Pompei, T. Sadibekova, I. Valtchanov; Astronomy &amp; Astrophysics; 16 Jul 2018; arXiv:1807.04760
  • AMICO galaxy clusters in KiDS-DR3: weak lensing mass calibration; Fabio Bellagamba, Mauro Sereno, Mauro Roncarelli, Matteo Maturi, Mario Radovich, Sandro Bardelli, Emanuella Puddu, Lauro Moscardini, Fedor Getman, Hendrik Hildebrandt, Nicola Napolitano; Monthly Notices of the Royal Astronomical Society; 5 Oct 2018 (v1), last revised 8 Jan 2019, 473, pp. 5221 - 5236; arXiv:1810.02827

பல்வகை

தொகு

இத்தாலியில் உள்ள போப் அஞ்சல் அட்டைகளின் மிகப்பெரிய, மிகவும் மதிப்புமிக்க சேகரிப்புகளில் ஒன்ற இலாரோ மொசுகார்தினி வைத்திருக்கிறார் , மேலும் அவர் இந்தத் துறையில் புகழ்பெற்ற வல்லுனர் ஆவார். அவர் உரோம நாணயவியலிலும் ஆர்வம் கொண்டவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lauro Moscardini - Home Page". University of Bologna. 7 November 2019. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  2. "Lauro Moscardini: Curriculum Vitae (June 2017)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரோ_மொஸ்கார்டினி&oldid=3779086" இலிருந்து மீள்விக்கப்பட்டது