லாலா ருக்கு

லாலா ருக்கு (Lala Rukh) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஆசிரியராவார். 1948-2017 வரையிலான கால கட்டத்தில் இவர் வாழ்ந்தார். பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் கலைஞர் என்ற பன்முகங்களுடன் இவர் இயங்கினார். பெண்கள் செயல் மன்றத்தின் நிறுவனர் என்று அறியப்பட்டார். [1][2]

லாலா ருக்கு
Lala Rukh
பிறப்பு29 சூன் 1948
லாகூர், பாக்கித்தான்
இறப்பு7 சூலை 2017
லாகூர், பாக்கித்தான்
பணிகலைஞர், மகளி உரிமை ஆர்வலர்.

கல்வியும் தொழிலும் தொகு

பாக்கித்தான் நாட்டின் லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து லாலா ருக்கு நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் லாலா முப்பது ஆண்டுகள் நுண்கலைத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். [3] 2000 ஆம் ஆண்டில் லாகூரிலுள்ள பொதுத்துறை பல்கலைக்கழகமான தேசிய கலைக் கல்லூரியில் லாலா எம்.ஏ (ஆனர்சு) காட்சிக் கலைத் திட்டத்தைத் தொடங்கினார். [4][5] துருக்கி மற்றும் ஆப்கானித்தானில் படிப்பதற்காக லாலாவுக்கு பாக்கித்தானின் பல்வேறு அரசு பயண மானியங்கள் வழங்கப்பட்டன. [6]

கலைப் படைப்புகள் தொகு

ருக்குவின் கலைப் படைப்புகளில் எளிமையும், தியான வெளிப்பாடுகளும் இருந்தன. [7] இவரது படைப்பான "மிரர் இமேஜ், 1, 2, 3, 1997" என்ற படத்தொகுப்பு 2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நியூயார்க் நகரத்தின் மெட்ரோபொலிட்டன் கலை அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது. [8][9] எண்ணிம இயங்குபடமான "ரூபக், 2016" இன் பதிப்பு இப்போது இலண்டனிலுள்ள டேட் மாடர்ன் கலை கண்காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. [10] இதேபோல வங்காளதேசத்தின் சம்தானி கலை அறக்கட்டளை, துபாயில் சமீல் கலை தொகுப்பிலும், நியூயார்க்கு நகரத்திலுள்ள தி மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்திலும் இப்பதிப்புகள் உள்ளன. அனைத்து பாக்கித்தான் இசை மாநாடு (1959), ] வாசல் கலை அறக்கட்டளை (2000), மற்றும் கிரே நாய்சு கேலரி போன்ற அமைப்புகளை லாலா நிறுவினார். [11]

2017 ஆம் ஆண்டு லாலா ருக்குவின் கலைப் படைப்புகள் செருமனியின் காசல் நகரில் 14 ஆம் ஆண்டு பதிப்பாக நடைபெற்ற டாக்குமெண்டா என்ற சமகால கலை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், இவரது படைப்புகள் சீனாவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திலும் சுவிட்சர்லாந்து நகரத்திலும் இக்கண்காட்சி நடந்தது. 2018 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டிலும், 2019 ஆம் ஆண்டில் வெனிசு நகரத்திலும் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதே ஆண்டு இங்கிலாந்தின் மூன்று நகரங்களில் கண்காட்சி நடந்தது.

பெண்ணிய நடவடிக்கைகள் தொகு

லாலா ருக்கு மகளிர் செயல் மன்றத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.[12][13] 1981 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கிய போது நிறுவன உறுப்பினர்களாக இருந்த பதினைந்து உறுப்பினர்களில் லாலாவும் ஒருவராவார்.[14][15] ஓர் ஆர்வலர் மற்றும் பிரச்சாரகராக இவர் பெண்கள் மற்றும் பல சிறுபான்மையினப் பெண்களின் உரிமைகளுக்காக பேசினார். சர்வாதிகாரி சியாவுல் அக்கின் இராணுவச் சட்டத்திற்கு எதிரான பெண்கள் போராட்டத்திலும் இவர் பங்கேற்றார். லாலாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இவரும் அந்த நேரத்தில் சிறைக்கு அனுப்பப்பட்டார். பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்று கருதி ஊடூத் கட்டளை தண்டனைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக இருந்தார். மீண்டும் முசாரப்பின் சர்வாதிகார ஆட்சியின்போதும் 2007 ஆம் ஆண்டு அவசரநிலை விதிக்கப்பட்டபோது, இவர் 50 உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் செயல்திறன் அமைப்பின் தீவிர உறுப்பினரான லாலா ருக்கு , சமூகம், பெண்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த தனது கலையைப் பயன்படுத்தினார். லாகூரில், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் உள்ளூர் அச்சகத்தினர் இவருடைய செய்திமடல்கள் மற்றும் எதிர்ப்புப் பொருட்களை அச்சிட மறுத்தனர்.

சார்ந்த அமைப்பிற்குத் தேவையான பல சுவரொட்டிகளை தயாரிக்கவும், வடிவமைக்கவும் மற்றும் அச்சிடவும் லாலா தொடங்கினார், அவை பெண்களுக்கு சுதந்திரம் மற்றும் சம உரிமைகளைக் கோருகின்றவையாகும். இவரது பெண்ணியக் கலையான "பெண்களுக்கு எதிரான குற்றங்கள்" இந்த சுவரொட்டிகளின் குழுவிலிருந்துதான் உருவானது.[16]

"அமைதி மற்றும் சனநாயகத்திற்கான பாக்கித்தான்-இந்திய மக்கள் மன்றத்தின் ஒரு பகுதியாகவும் இவர் இருந்தார். லாலா ருக்கு ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சகோதரியின் மகள் மரியத்தை தத்தெடுத்துக் கொண்டார். ருக்குவுக்கு 2017 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. 2017 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று 69 ஆவது வயதில் இவர் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Veteran activist Lala Rukh's demise mourned – Pakistan – Dunya News".
  2. Gabol, Imran (7 July 2017). "WAF activist and artist Lala Rukh passes away in Lahore".
  3. "Veteran activist Lala Rukh breathes her last" (in en). The Express Tribune. 7 July 2017. https://tribune.com.pk/story/1452522/veteran-activist-lala-rukh-breathes-last. 
  4. "Lala Rukh". Karachi Biennale 2017 (in ஆங்கிலம்).
  5. "Lala Rukh (1948–2017)". www.artforum.com.
  6. "Art Radar celebrates Lala Rukh". Archived from the original on 2020-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15.
  7. "Lala Rukh – Introduction by Natasha Ginwala".
  8. "The Met Acquires Works by Pakistani Artist Lala Rukh". www.metmuseum.org.
  9. "The Met Adds Works by Pakistani Artist Lala Rukh to Its Collection". www.artforum.com.
  10. "Lala Rukh: Panel Discussion – Talk at Online Event". Tate.
  11. "Resonance: After Lala Rukh". The Friday Times. 27 December 2019. https://www.thefridaytimes.com/resonance-after-lala-rukh/. 
  12. "Lala Rukh passes away" (in en). The Nation. 8 July 2017 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201123194843/https://nation.com.pk/08-Jul-2017/lala-rukh-passes-away. 
  13. "Pakistani icon Lala Rukh remembered on her birthday | SAMAA". Samaa TV. https://www.samaa.tv/culture/2020/06/pakistani-icon-lala-rukh-remembered-on-her-birthday/. 
  14. Ahmed, Shoaib (7 November 2017). "Commemorating the life of Lala Rukh, artist and activist extraordinaire" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1368920. 
  15. "Women's Action Forum national convention, Lahore 1982". a lib dem in international development (in ஆங்கிலம்). 17 November 2006.
  16. "Crimes against Women". www.metmuseum.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_ருக்கு&oldid=3570196" இலிருந்து மீள்விக்கப்பட்டது