லிடியா கோ நியூசிலாந்தைச் சேர்ந்த குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார். இவர் தொழிற்முறையாக அக்டோபர் 23, 2013 அன்றிலிருந்து குழிப்பந்தாட்டத்தை விளையாடி வருகிறார். உலகின் மிக இளம்வயது குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார்[1]. மகளிர் தொழிற்முறை குழிப்பந்தாட்ட சங்கம் (LPGA) நடத்தும் பந்தயங்களில் மிக இளம் வயதில் வாகை சூடிய வீராங்கனையாகவும் இவர் திகழ்கின்றார்.[2] 23 பந்தயங்களே விளையாடிய நிலையில், உலக மகளிர் குழிப்பந்தாட்ட வீராங்கனைகள் தரப் பட்டியலில் 2013 ஆம் ஆண்டு ஐந்தாவது இடத்தினைப் பிடித்தார். 2015 பிப்ரவரியில் இவர் உலக மகளிர் குழிப்பந்தாட்ட வீராங்கனைகள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார்[3].

லிடியா கோ
லிடியா கோ-2013 மகளிர் பிரிட்டிஷ் ஓபன்
பிறப்பு24 ஏப்பிரல் 1997 (அகவை 27)
சியோல்
படித்த இடங்கள்
  • Pinehurst School
விருதுகள்Mark H. McCormack Medal
இணையம்http://www.lydiako.co.nz

மேற்கோள்கள்

தொகு
  1. "Ko youngest ever world No 1". Radio New Zealand. 1 February 2015. http://www.radionz.co.nz/news/national/265009/ko-youngest-ever-world-no-1. பார்த்த நாள்: 31 January 2015. 
  2. "Lydia Ko, 14, wins tour event in Australia". ESPN.com. அசோசியேட்டட் பிரெசு. 29 January 2012. http://espn.go.com/golf/story/_/id/7515608/lydia-ko-14-becomes-youngest-winner-tour-event. பார்த்த நாள்: 26 August 2012. 
  3. "Our Lyds the Youngest Player in Worlds Field". NZ Institute Of Golf. 20 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 September 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிடியா_கோ&oldid=3914838" இலிருந்து மீள்விக்கப்பட்டது