லிட்டில் வைல்ட்ரோஸ்

 

லிட்டில் வைல்ட்ரோஸ்
கழுகு கூட்டில் கன்னி மற்றும் லிட்டில் வைல்ட்ரோஸ். தி க்ரிம்சன் ஃபேரி புக் (1903) இல் ஹென்றி ஜஸ்டிஸ் ஃபோர்ட்டின் சித்திரம்.
நாட்டுப்புறக் கதை
பெயர்: லிட்டில் வைல்ட்ரோஸ்
தகவல்
Mythology: ரோமானிய நாட்டுப்புறக் கதை
Country: ரொமானியா

லிட்டில் வைல்ட்ரோஸ் - சிறு கட்டுரோஜா, ஒரு ரோமானிய விசித்திரக் கதை ஆகும். ஆண்ட்ரூ லாங் அதை தி கிரிம்சன் ஃபேரி புத்தகத்தில் சேர்த்தார். [1]

இந்த கதையை ருமேனிய எழுத்தாளர் மிரோன் பாம்பிலியு எழுதியதாக மைட் கிரெம்னிட்ஸ் கூறினார். மேலும் இக்கதை கோன்வோர்பிரி லிடெரரே என்ற இதழில் வெளியிடப்பட்டது . [2]

மொழிபெயர்ப்புகள்

தொகு

மைட் கிரெம்னிட்ஸ் இந்த கதையை ஜெர்மன் மொழியில் வால்ட்ரோஷென் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். [3] [4]

சுருக்கம்

தொகு

ஒரு முதியவர் தன் வீட்டை யாரேனும் பிற்காலத்தில் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு குழந்தையைத் தேடிச் சென்றார். ஒரு இருண்ட காட்டில், அவர் ஒரு துறவியைக் கண்டார். அத்துறவி முதியவருக்கு ஒரு ஆப்பிளைக் கொடுத்தார். பாதி சாப்பிட்டு தனது மனைவிக்கு பாதியைக் கொடுக்குமாறு கூறினார். வீட்டிற்கு வரும் வழியில் தாகம் எடுத்தது; தண்ணீர் இல்லாத காரணத்தால் அவர் முழு ஆப்பிளையும் சாப்பிட்டார். பின் அவர் ஒரு அழகான பெண் குழந்தையைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனது மனைவிக்குக் காட்டுவதற்காக தனது வீட்டிற்கு அருகில் ஒரு பாத்திரத்தில் கிடத்தினார். ஒரு கழுகு தன் குஞ்சுகள் சாப்பிடுவதற்காக குழந்தையை தூக்கிச் சென்றது. ஆனால் அதற்கு பதிலாக அக்குஞ்சுகள் அவளிடம் உறவு பாராட்டின. ஒரு லிண்ட் புழு அவற்றைச் சாப்பிட வந்தது.ஆனால் ஏதோ அதைக் கொன்றது. கழுகு அவளை கழுகுக் குஞ்சுகளுடன் செர்த்து வளர்த்து வந்த்தது.

ஒரு நாள், ஒரு பேரரசரின் மகன் அவளைப் பார்த்தான். அவனால் அவளைக் கவர முடியவில்லை. அவன் காதலால் நோய்வாய்ப்பட்டான். அவனுடைய தந்தை அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்டார். அவன் கூறியதைக் கேட்டு, அப்பெண்ணைப் பற்றிய செய்தியை ஊர் முழுதும் அனுப்பினார். ஒரு வயதான பெண் அவர்களுக்கு அப்பெண்ணை அழைத்து வருவதாக உறுதியளித்தார். அவள் மரத்தின் அடியில் நெருப்பை வைக்க ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் தவறாகச் செய்தாள். லிட்டில் வைல்ட்ரோஸ் அதை எப்படிச் செய்வது என்று அவளிடம் சொல்ல முயன்றாள். ஆனால் அவள் அதைத் தொடர்ந்து தவறாகவே செய்தாள்; லிட்டில் வைல்ட்ரோஸ் அவளுக்கு செய்துகாட்ட கீழே வந்தாள். வயதான பெண் அவளை தூக்கிச் சென்றாள். பேரரசரின் மகன் அவளை மணந்தான்.

பகுப்பாய்வு

தொகு

கதை வகை

தொகு

அமெரிக்க நாட்டுப்புறவியலாளரான டி.எல். ஆஷ்லிமான் இந்த கதையை ஆர்னே-தாம்சன் இன்டெக்ஸில் 554B வகை -, "தி சைல்ட் ஹூ வாஸ் ரைஸ்டு பை அன் ஈகிள் (கழுகால் வளர்க்கப்பட்ட குழந்தை)" என வகைப்படுத்தினார். [5] இது "தி பாய் இன் தி ஈகிள்ஸ் நெஸ்ட் (கழுகுக் கூட்டில் ஒரு சிறுவன்)" என்று பெயரிடப்பட்ட ஒரு கதை வகையாகும். கழுகால் வளர்க்கப்படும் ஒரு ஆண் கதாநாயகனின் கதாபாத்திரம் இவ்வகையில் உள்ளது. [6]

உருவகங்கள்

தொகு

பறவையின் கூட்டில் உள்ள குழந்தை எனும் கதை வகை " ஃபவுண்ட்லிங்-பேர்ட்" டிலும் காணப்படுகிறது.

மணப்பெண்ணை மரத்தில் இருந்து கீழே இறக்கும் முறை " த கோல்டன் ஸ்டாக் " இல் உள்ளது. பொதுவாக, " அண்ணனும் சகோதரியும் ", " ஆறு அண்ணப்பறவைகள் " அல்லது " மேரியின் குழந்தை " போன்றவற்றில், நாயகன்அவளைத் தானே கவர்ந்து செல்வதில் வெற்றி பெறுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Andrew Lang, Crimson Fairy Book, "Little Wildrose"
  2. Kremnitz, Mite. Rumänische Märchen. Übersetzt von -. Leipzig: Wilhelm Friedrich, 1882. Vorwort.
  3. Kremnitz, Mite. Rumänische Märchen. Übersetzt von -. Leipzig: Wilhelm Friedrich, 1882. pp. 118-132.
  4. Kremnitz, Mite; Safford, Mary J. Roumanian Fairy Tales. New York: H. Holt and company. 1885. pp. 91-104.
  5. Ashliman, D. L. A Guide to Folktales in the English Language: Based on the Aarne-Thompson Classification System. Bibliographies and Indexes in World Literature, vol. 11. Westport, Connecticut: Greenwood Press, 1987. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-25961-5.
  6. Aarne, Antti; Thompson, Stith. The types of the folktale: a classification and bibliography. Folklore Fellows Communications FFC no. 184. Third printing. Helsinki: Academia Scientiarum Fennica, 1973 [1961]. p. 200.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிட்டில்_வைல்ட்ரோஸ்&oldid=3668981" இலிருந்து மீள்விக்கப்பட்டது