லினி காக்சு

அமெரிக்க நீச்சல் வீராங்கனை

லினி காக்சு ( Lynne Cox 1957) என்பவர் அமெரிக்க நீச்சல் வீராங்கனை, நூலாசிரியர் மற்றும் நெறிப்படுத்தும் பேச்சாளர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் பெரிங் என்னும் நீரிணையில் 1987 ஆகத்து 7 இல் கடலில் நீச்சல் அடித்து, சாதனை படைத்தார். இதன் விளைவாக, நல்ல செயலாக, அந்தக் காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரை நிறுத்துவதற்கு இவரது அருஞ்செயல் வசதியாக அமைந்தது.[1]

லினி காக்சு

அடுத்த ஆண்டில் அமெரிக்க அரசுத் தலைவர் ரானல்ட் ரேகன் உடன் அணு சக்தி ஒப்பந்தம் ஆன போது சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ், லினி காக்சு செய்த சாதனையைப் பாராட்டிப் பேசினார்.

அமெரிக்காவின் லிட்டில் டியோமிட் தீவுக்கும், சோவியத் யூனியன் பிக் டியோமிட் தீவுக்கும் இடையில் உள்ள 2.7 மைல்கள் தொலைவை 2 மணி 5 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். அப்பொழுதில் கடல் நீர் மிகவும் குளிர் நிலையில் இருந்தது.[2]

பிற சாதனைகள் வரலாறு தொகு

லினி காக்சுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன், நியூ ஆம்ப்சயரிலிருந்து கலிபோர்னியாவுக்கு இவருடைய பெற்றோர்கள் குடியேறினர். காக்சு தம் நண்பர்களுடன் கேடலினா தீவு கால்வாயை நீந்திக் கடந்தார். 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திலிருந்து பிரான்சு வரை இங்கிலீசு கால்வாயை இரண்டுமுறை காக்சு நீந்திக் கடந்து சாதனை படைத்தார். 1975இல் நியூசிலாந்தின் 16 கிலோமீட்டர் தொலைவு குக் நீரிணையில் 10 டிகிரி வெப்ப நிலை கடல் நீரில் நீந்தினார். இந்தச் சாதனை செய்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். சிலி நாட்டின் மகெல்லன் நீரிணையில் நீந்திய முதல் வீரர் என்றும் தென்னாப்பிரிக்காவில் கேப் ஆப் குட் ஹோப்பில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்றும் பெயர் பெற்றார். அண்டார்க்டிகா கடலில் 1.6 கிலோமீட்டர் தொலைவு நீந்தினார். இதன் பட்டறிவு நிலைகளை ஸ்விம்மிங் டு அண்டார்க்டிகா என்னும் நூலில் விவரித்துள்ளார்.

எழுதிய நூல்கள் தொகு

  • ஸ்விம்மிங் டு அண்டார்க்டிகா (2004)
  • கிரேசன் (2006)
  • சவுத் வித் தி சண் (2011)
  • ஓப்பன் வாட்டர் ஸ்விம்மிங் மானுவல் (2013)
  • எலிசபெத் குவீன் ஆப் தி ஸீஸ் (2014)
  • ஸ்விம்மிங் இன் தி சிங்க் (2016)[3]

பெற்ற விருதுகள் தொகு

  • 2014 இல் கலிபோர்னியா புத்தக விருதுகள்
  • 2015 இல் இர்மா பிலாக் விருது
  • ஆஸ்டிராய்ட் 37588 லினிகாக்சு என்று இவரைப் பெருமைப்படுத்திப் பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள் தொகு

  1. "Lynne Cox swims into communist territory". History. பார்க்கப்பட்ட நாள் 7 August 2017.
  2. http://articles.latimes.com/1987-09-06/magazine/tm-6226_1_america-s-little-diomede-island
  3. http://www.lynnecox.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=லினி_காக்சு&oldid=3095102" இலிருந்து மீள்விக்கப்பட்டது