லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும்[1]. ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது. முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.

இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து, 138 பாக்களைத் தொகுத்து, ‘சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன், வெளியிட்டிருக்கிறார்.

ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும்

ஆதாரங்கள்

தொகு
  1. தமிழ் இணையக் கல்விக்கழகம்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிமரைக்கூ&oldid=4031658" இலிருந்து மீள்விக்கப்பட்டது