லியுசின்
லியுசின் (liuqin: 柳琴; pinyin: liǔqín, pronounced [li̯òʊ̯tɕʰǐn]) என்பது சீனாவின் நரம்பிசைக் கருவிகளுள் ஒன்று. வில்லோ மரப்பலகையால் தயாரிக்கப்பட்டது. இக்கருவி வில்லோ மரத்தின் இலை வடிவில் இருப்பதால், வில்லோ மர இலை இசைக்கருவி எனவும் அழைக்கப்படுகின்றது. லியுசின் இசைக் கருவியின் வடிவமும் அமைவும் பிபா(pipa)எனும் சீன இசைக்கருவியைப் போலவே ஆனால் சற்றே நீளத்தில் வேறுபட்டு இருக்கும். இக்கருவியை இயக்கும் வழிமுறையும், பிபாவை இயக்கும் வழிமுறையும் ஒன்று போலவே இருக்கும். சீனாவின் சாங்துங், அன்ஹுவெய், ஜியாங்சு ஆகிய மாநில மக்களிடையில் நீண்ட காலமாக இசைக்கப்படும் ஓர் பாரம்பரிய இசைக்கருவியாகும். இக்கருவி நாட்டுப்புற இசை நாடகத்தில் பயன்படுத்தப்பதும் உண்டு. [1]
இன்று லியுசின் எனப்படும் இசைக் கருவி, சீன இசைத் துறையில் பல்வேறு பங்கு வகிக்கின்றது. சீனாவின் பாரம்பரியமிக்க நரம்பிசைக் கருவிகளில் லியுசின் தனிச்சிறப்பு மிக்க உயர் குரலொலி இசைக்கருவியாகும். அதன் ஒலி இதர இசைக்கருவிகளின் ஒலியினால் பாதிக்கப்படாது. இதர இசைக்கருவியின் ஒலியுடன் இணையாது. தவிர, மேலை நாட்டு இசைக்கருவியான மெடுலின் இசைக்கருவியிலிருந்து வெளிவரும் ஒலிப்பயன் இதற்கு உண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-03. பார்க்கப்பட்ட நாள் 2012-05-04.