லியுபோவ் அக்கேபுஷ்
லியுபோவ் மைகைலிவ்னா ஹக்கேபுஷ் (Liubov Mykhailivna Hakkebush, 26 செப்டம்பர் 1888 – 28 மே 1947) என்பவர் உக்ரேனிய நடக நடிகை, ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். இவர் உக்ரைனிய சோவியத் சோசலிசக் குடியரசின் மக்கள் கலைஞர் (1943) என்ற விருதைப் பெற்றவர்.[1] வில்லியம் சேக்ஸ்பியரின் மக்பத்தில் மிகவும் பிரபலமான பாத்திரமான லேடி மாக்பெத் மற்றும் இப்சனின் கோஸ்ட்சில் ஃப்ரூ அல்விங் உட்பட 80 க்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் துணை வேடங்களில் இவர் தோன்றியுள்ளார்.
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
தொகுலியுபோவ் அக்கேபுஷ் 1888, செப்டம்பர் 26 அன்று உருசியப் பேரரசின் நெமிரிவில் பிறந்தார்.[2] இவர் மாஸ்கோ கமெர்னி நடகக் கலையரங்கில் படித்தார். மேலும் மாஸ்கோவில் உள்ள கோப்சார் உக்ரேனிய கிளப்பின் தொழில்முறை அல்லாத நாடகத் தயாரிப்புகளில் தோன்றினார்.[3]
தொழில்
தொகுஅக்கேபுஷ் 1917 இல் கீவில் உள்ள உக்ரேனிய மக்கள் நாடக அரங்கின் மேடையில் மிஸ் (ஒலெக்சாண்டர் ஓல்சின் இலையுதிர் காலம்) பாத்திரத்தில் அறிமுகமானார்.[1] 1919-1921 இல், இவர் கீவில் உள்ள உக்ரேனிய சோவியத் குடியரசின் ஷெவ்செங்கோ முதல் நடாக அரங்கிலும், 1921-1922 இல் வின்னிட்சியாவில் உள்ள ஃபிராங்கோவின் பெயரிடப்பட்ட உக்ரேனிய சோவியத் சோவியத் குடியரசின் இரண்டாவது நாடக அரங்கிலும் நடித்தார்.[4]
ஹக்கேபுஷ் 1922 முதல் 1926 வரை பெரெசில் நடகக் குழுவில் பணியாற்றினார்.[1] 1926 ஆம் ஆண்டில், இவரது கணவர் வாசில் வாசில்கோ ஹக்கேபுஷ் உடன் ஒடெசாவுக்கு குடிபெயர்ந்தார்.[2] 1926 முதல் 1928 வரை, இவர் ஒடெசாவின் உக்ரேனிய நாடக்க் குழுவில் பணியாற்றினார்.[3] 1928 ஆம் ஆண்டில், அக்கேபுஷும் வாசில்கோவும் கார்கிவுக்குச் சென்றனர், அங்கு அக்கேபுஷின் கணவர் செர்வோனோசாவோட்ஸ்க் உக்ரேனிய நாடக அரங்கின் கலை இயக்குநரானார்.[2][5] அக்கேபுஷ் 1933 வரை கார்கிவ் செர்வோனோசாவோட்ஸ்க் உக்ரேனிய நாடகக் குழுவில் பணியாற்றினார்.[4]
1933-1935 இல் ஹக்கேபுஷ் டொனெட்ஸ்க் உக்ரேனிய இசை நாடக அரங்கிலும், 1935 முதல் டி. ஷெவ்செங்கோவின் பெயரிடப்பட்ட கார்கிவ் உக்ரேனிய நாடக அரங்கிலும் பணியாற்றினார்.[1] 1938-1941 இல் அக்டோபர் புரட்சியின் பெயரிடப்பட்ட ஒடெசா நடக அரங்கில் அக்கேபுஷ் பணியாற்றினார்.[4]
இரண்டாம் உலகப் போரின் போது இவர் ஷெவ்செங்கோ கார்கிவ் உக்ரேனிய நடககக் குழுவில் இணைந்தார் (1941-1944).[4] 1943 ஆம் ஆண்டில் இவருக்கு உக்ரேனிய சோவியத் சோசலிசக் குடியரசின் மக்கள் கலைஞர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[1]
இவர் நடிப்பதைத் தவிர நடகக் குழுகளிலும், கீவ் லைசென்கோ இசை மற்றும் நாடக கல்வி நிறுவனம் (1922-6), ஒடெசா (1926-8), கார்கிவ் (1929-33), கீவ் இன்ஸ்டிடியூட் ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ் (1944–7) போன்ற இசை மற்றும் நாடக கல்வி நிறுவனங்களில் நடிப்பைக் கற்பித்தார்.[3]
1944 க்குப் பிறகு அக்கேபுஷ் கீவில் குடியேறி மொழிபெயர்ப்புப் பணியில் கவனம் செலுத்தினார். மொலியர், கார்க்கி ("த பூர்ஷ்வா"), திரென்யோவ், அஃபினோஜெனோவ், ரோமாஷோவ் ஆகியோரின் படைப்புகளை உக்ரேனிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.[6]
லியுபோவ் அக்கேபுஷ் 28 மே 1947 அன்று கீவில் இறந்தார்.[3]
1938-47 காலகட்டத்தில் இவர் கிவ் நகரின், சைட்டோமிர்ஸ்கா தெருவில் வாழ்ந்த 17 எண்ணுள்ள வீட்டில் வாழ்ந்தை நினைவுகூறும் விதமாக வீட்டின் முகப்பில் ஒரு கருங்கலாலான நினைவுப் பலகை நிறுவப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Гаккебуш Любов Михайлівна — Енциклопедія Сучасної України". esu.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ 2.0 2.1 2.2 "Гаккебуш Любовь Михайловна". odessa-memory.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Hakkebush, Liubov". www.encyclopediaofukraine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Любовь Гаккебуш". Кино-Театр.Ру. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ "ГАККЕБУШ". leksika.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
- ↑ 6.0 6.1 "Гаккебуш Любовь Михайловна. Мемориальная доска". КИЕВФОТО (in ரஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.[தொடர்பிழந்த இணைப்பு]