லீலா சுமந்த் மூல்கோகர்
லீலா சுமந்த் மூல்கோகர் (Leela Sumant Moolgaokar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். 1916 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவில் தன்னார்வ இரத்தமாற்ற சேவைக்கு முன்னோடியாக இவர் அறியப்பட்டார். [1] இவரது கணவர் சுமந்த் மூல்கோகர் டாடா மோட்டார் நிறுவனத்தின் தலைவராகவும் டாடா எஃகு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். [2]
லீலா சுமந்த் மூல்கோகர் Leela Sumant Moolgaokar | |
---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1916 |
இறப்பு | 20 மே 1992 | (அகவை 75)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | சமூக சேவை |
வாழ்க்கைத் துணை | சுமந்த் மூல்கோகர் |
மும்பையின் செயின்ட் சியார்ச்சு மருத்துவமனையில் லீலா கதிர்வீச்சுப் படவரைவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [1] 1965 ஆம் ஆண்டில், டாடா மோட்டார் நிறுவன கிரகனி சமூக நலச் சங்கத்தை தொடங்கினார். இச்சங்கம் நிறுவன ஊழியர்களின் வீட்டில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை உருவாக்கியது.. [3]
லீலாவின் சேவைகளைப் பாராட்டும் விதமாக 1963 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்மசிறீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. [4] இவர் 1975-76 ஆம் ஆண்டு காலத்தில் பம்பாயின் மாநகரத் தலைவராகவும் இருந்தார். [1]
லீலா சுமந்த் மூல்கோகர் 1992 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Leela Moolgaokar (1916-1992)". Tata Central Archives. Archived from the original on 2015-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-09-04.
- ↑ Tata Central Archives. "Leela Moolgaokar". Archived from the original on 2008-07-19. பார்க்கப்பட்ட நாள் 2 September 2014.
- ↑ Citizens at Work Vol.3. TERI Press. 2007. pp. 117–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7993-116-5.
- ↑ "Padma Awards Directory (1954–2013)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.