லூதரனியம்

(லூத்தரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லூதரனியம் (Lutheranism) என்பது "நம்பிக்கையால் மட்டுமே மீட்பு உண்டு"[1] என்னும் கொள்கையை கொண்டுள்ள இறையியல் இயக்கத்தைக் குறிக்கும். இது தன் பெரும்பாண்மையான கோட்பாடுகளை மார்ட்டின் லூதர் என்னும் ஜெர்மனிய சீர்திருத்தவாதியிடமிருந்து பெறுகின்றது.

லூதரின் முத்திரை

லூதர் காலத்திலேயே அவர் தொடங்கிய சீர்திருத்தம் மாற்று கருத்துக்களால் பலவாறாகப் பிரிந்தது. ஆங்கிலியன், கால்வினியம், பிரெஸ்பைடேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த கூறுகள் புராட்டஸ்டன்ட் என்று பொதுப் பெயரிட்டு அழைக்கப்படலாயின.

மார்டின் லூதர் தொடக்கத்தில் கத்தோலிக்க சபைக்கு மாற்றாக நிறுவிய சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை இன்றளவும் லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்)என்றெல்லாந்தான் அழைக்கப் படுகிறது. அவர்களின் சீர்திருத்தக் கோட்பாடு லூதரனியம் என்று அடையாளப்படுத்தப் படுகிறது.

குறிப்புகள்

தொகு
  1. Gritsch, Eric W. and Jenson, Robert W. Lutheranism: The Theological Movement and its Confessional Writings. Philadelphia: Fortress Press, 1976. p. 6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூதரனியம்&oldid=1356545" இலிருந்து மீள்விக்கப்பட்டது