லெபனான் மலை ஆளுநரகம்

லெபனானின் மாகாணம்

லெபனான் மலை கவர்னரேட் (Mount Lebanon Governorate, அரபு மொழி: محافظة جبل لبنان‎ ) என்பது லெபனானின் எட்டு ஆளுநரகங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பாப்தா நகரமாகும்.

லெபனான் மலை கவர்னரேட்
محافظة جبل لبنان
Gouvernorat du Mont-Liban
லெபனானில் லெபனான் மலை கவர்னரேட்டின் அமைவிடம்
லெபனானில் லெபனான் மலை கவர்னரேட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°50′N 35°32′E / 33.833°N 35.533°E / 33.833; 35.533
Countryலெபனான்
தலைநகரம்பாப்தா
அரசு
 • ஆளுநர்முகமது அல் மக்காவி
பரப்பளவு
 • மொத்தம்1,958 km2 (756 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்18,00,000
 • அடர்த்தி920/km2 (2,400/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே)

இந்த ஆளுநரகத்துக்கு லெபனான் மலைப்பிரதேசத்தின் பெயரிடப்பட்டது. இந்த ஆளுநரகமானது பெய்ரூட் கவர்னரேட்டைச் சூழ்ந்ததாக, மத்தியதரைக் கடலோரப் பகுதியை ஒட்டி லெபனானின் வடக்கு கவர்னரேட் மற்றும் தெற்கு கவர்னரேட்டுக்கு இடையில் பரவியுள்ளது.

மாவட்டங்கள்

தொகு

இந்த ஆளுநரகம் ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:

மாவட்டம் அரபு பெயர் மூலதனம்
அலி قضاء عاليه அலி
பாப்தா قضاء بعبدا பாப்தா
சௌப் قضاء الشوف பீட்டெட்டின்
பைப்லோஸ் قضاء جبيل பைப்லோஸ்
கேசர்வன் قضاء كسروان ஜூனி
மேட்ன் قضاء المتن ஜிடிடிஷ்
 
பைப்லோஸ் துறைமுகத்தின் இடிபாடுகள்

சமயம்

தொகு




 

லெபனான் மலை ஆளுநரகத்தில் சமயம் (2020)

ஆளுநரகத்தில் மரோனைட் கிறிஸ்தவர்கள் கெஸ்ர்வான் மற்றும் பைப்லோஸ் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் மெட்ன் மற்றும் பாப்தா மாவட்டங்களில் பன்முகத்தன்மையோடு (கிரேக்க மரபுவழி, ஆர்மீனிய மரபுவழி, கிரேக்க கத்தோலிக்கர்கள் போன்ற பிற கிறிஸ்தவ மதப்பிரிவுகள் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரையும் கொண்டுள்ளது). டுரூஸ் சமயப் பிரிவினர் அலே மாவட்டத்தில் பெரும்பான்மையினராக உள்ளனர். சௌப் மாவட்டமானது பன்முகத்தன்மையுடன் (சுன்னி முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கிட்டத்தட்ட சமமானவர்கள்) உள்ளது. ஷியா சிறுபான்மையினர் பாப்தா மற்றும் பைப்லோஸ் மாவட்ங்களில் முறையே 25% மற்றும் 20% என்ற விகிதத்தில் உள்ளனர்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெபனான்_மலை_ஆளுநரகம்&oldid=3083596" இலிருந்து மீள்விக்கப்பட்டது