லேசர் நில சமப்படுத்தும் கருவி

லேசர் நில சமப்படுத்தும் கருவி தொகு

பெரும்பாலான நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் சமச்சீராக இல்லாத காரணத்தால் இடப்படும் இருபொருளிவன் பயிர்களுக்கு சரி விகித்த்தில் கிடைப்பதில்லை. இதனால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காலநடைகள் மற்றும் டிராக்டர் மூலம் சமப்படுத்தும் முறையில் சரிவர சமன்படுத்த முடியவில்லை இக்குறையினை நிவர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பமே சேலசர் நிலம் சமன்படுத்தும் கருவி ஆகும். இந்த முறை வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. தற்போது வளரும் நாடுகளில் பின்பற்றிப் வரப்படுகிறது.

செயல்படும் முறை தொகு

இது மூன்று பாகங்களைக் கொண்டது

  • லேசர் கற்றையை செலுத்தும் பகுதி
  • லேசர் கற்றையை வாங்கும் பகுதி
  • தானியங்கி சமன்படுத்தும் பகுதி

இதில் லேசர் செலுத்தும் பகுதி நிலத்தின் ஒரு பொதுவான இடத்தில் வைத்து தேவைப்படும் நில மட்ட அளவைக் குறிக்க வேண்டும. இந்த மட்டத்தை தெரிவிக்கும் வகையில் இந்த கருவியானது சேலர் கற்றைகளை பல பாகங்களுக்கு அனுப்புகின்றன. இந்த கற்றையை டிராக்டரில் பொருத்தப்பட்ட சேலர் கற்றையை வாங்கும் பகுதி பெற்றுக் கொண்டு அதிக தானியங்கி பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்புகிறது. அதன்படி தேவையான அளவு சமன்படுத்தி மேலும் சரிசெய்கிறது.

பயன்பாடுகள் தொகு

மிகச் சரியாக சமன்படுத்தப்பட்ட நிலம் மற்றும் மென்மையான மேற்பரப்பு கிடைக்கிறது. நீர் பாய்ச்சுவதற்கு உண்டான நீரில் அளவு, நேரம் சேமிக்கப்படுகிறது. அனைத்துப் பயிர்களுக்கு சரியான அளவில் நீர் கிடைக்கிறது. ஈரப்பதம் சரிவிகித அளவில் பாதுகாக்கப்படுகிறது. விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் தேவை குறைகிறது. ஊடுசாகுபடி செய்வது எளிதாகிறது.

மேற்கோள் தொகு

  1. நீர் வள அமைச்சகம்,
  2. இந்திய அரசு கரும்பு இனப் பெருக்கு நிலையம், கோயம்புத்துர்