லேசர் பெருக்கத் தத்துவம்

லேசரில் உபயோகப்படும் ஆற்றல் பெருக்கத்திற்குத் தேவையான பல்வேறு படிகளை கீழ்க்காணும் படத்தின் வாயிலாக விளக்கலாம். அதிக எண்ணிக்கைகயிலான அணுக்களைக் கிளர்வு கொள்ளச் செய்து செயல்பாடு மிக்க ஊடகம் (Active medium) ஒன்று தயார் செய்யப்படுகிறது. இது பம்ப் ஆற்றலின் துணை கொண்டு செய்யப்படுகிறது.

அதிா்வெண்ணெய்க் கொண்ட ஒரு ஃபோட்டான் கதிர்வீச்சு ஒன்று அணுக்களைத் தூண்டி, அணுக்களின் மேல் நோக்கும் தாவலைவிட அதிகமான கீழ்நோக்கும் தாவலை உண்டுபண்ணுகின்றன. இதனால் அணுத் தொகுப்பினால் ஃபோட்டான்கள் உமிழப்படுகின்றன. இறுதிச் செயலாக உட்கொள்ளப்பட்ட ஃபோட்டான்களின் எண்ணிக்கையினைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ஃபோட்டான்கள் வெளிவருகின்றன. அதாவது, உள்ளே வரும் ஒளி அலை, அணுத் தொகுப்பினுள் பயணிக்கும்பொழுது பெருக்கப்படுகிறது. இதனால் வெளிவரும் ஒளிக்கற்றை அதிக ஆற்றலைப் பெற்றதாக இருக்கும்.