லேட்ரோடெக்டசு எரித்ரோமெலசு

லேட்ரோடெக்டசு எரித்ரோமெலசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தெரிடிடே
பேரினம்:
லேட்ரோடெக்டசு
இனம்:
லே. எரித்ரோமெலசு
இருசொற் பெயரீடு
லேட்ரோடெக்டசு எரித்ரோமெலசு
சிமித் & கிளாசு, 1991

லேட்ரோடெக்டசு எரித்ரோமெலசு (Latrodectus erythromelas), விசமுடைய சிலந்தி சிற்றினமாகும். விதவை சிலந்திகள் பொதுவாக அழைக்கப்படும் இச்சிலந்தி லேட்ரோடெக்டசு பேரினத்தினைச் சார்ந்தது. இது இந்தியாவிலும் இலங்கையில் மட்டுமே காணக்கூடியதாகும்.[1]

விளக்கம்

தொகு

பெண் ஆண்களை விட பெரியது. இதனுடைய சராசரி மொத்த நீளம் சுமார் 8.8 மி.மீ. கண்கள் கருப்பு நிறமுடையது, கண்ணின் பகுதியில் கருப்பு-சிவப்பு விளிம்புகளுடன் காணப்படும். கறுப்பு நிற மேலோடு வட்டமானது. நேர்த்தியான முடிகளால் மூடப்பட்டிருக்கும். தலை மார்பு கருப்பு நிறமாகவும், முடிகளால் மூடப்பட்டிருக்கும். தலை மார்பு பகுதியில் முதுகுபுறத்தில், நன்றாகத் தெரியக்கூடிய சிவப்பு பட்டைக் காணப்படும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Latrodectus erythromelas Schmidt & Klaas, 1991". World Spider Catalog. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.
  2. "Latrodectus erythromelas". India Biodiversity Portal. பார்க்கப்பட்ட நாள் 22 May 2016.