லோங்டிங் மாவட்டம்

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

லோங்டிங் (Longding) அருணாசலப் பிரதேசத்தில் அமைந்த்துள்ள 17 மாவட்டங்களிலும் ஒன்றாகும். இதுவே அருணாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட மாவட்டம் ஆகும். திரப் மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து பிரிந்த பின்னரே இது மாவட்டம் ஆகியது. இதன் கிழக்கெல்லைப் பிரதேசமே மியான்மார் ஆகும். இதன் தெற்கு, மேற்கு எல்லைகளாக நாகாலாந்து அமைந்துள்ளது அத்துடன் இது பிரிந்து வந்த திரப் மாவட்டமே இதன் வடக்கெல்லை ஆகும்.[1]

வரலாறு

தொகு

வரலாற்று ரீதியாக வஞ்சோ மக்களே (Wancho people) இங்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் நாகா மக்களைப் போன்றவர்கள் அல்லது அவர்களுக்கு ஒப்பானவர்கள். படுக்கை தயாரித்தல், துப்பாக்கி தயாரித்தல், மர வேலைப்பாடுகள் போன்றவற்றில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். அருணாசலப் பிரதேசத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

பிரிவுகள்

தொகு

லோங்டிங் மாவட்டத்தில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன: லோங்டிங், கனுபரி, பொங்சோ, வக்கா, புமா, லோனா.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Longding District". Veethi. பார்க்கப்பட்ட நாள் 5 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்டிங்_மாவட்டம்&oldid=3890820" இலிருந்து மீள்விக்கப்பட்டது