லோமேசர்
லோமேசர் என்பவர் இந்து புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் முனிவர் ஆவார்.[1] இவர் நீண்ட ஆயுள் கொண்டவர் என்ற குறிப்பு உள்ளது. ஒரு பிரம்மாவின் ஆயுள் நூறு தேவ வருடங்கள் எனவும், ஒவ்வொரு தேவ வருடத்துக்கும் முந்நூற்று அறுபத்து ஐந்து தேவ நாட்கள் எனவும், ஒவ்வொரு தேவ நாட்களிலும் பதினான்கு இந்திரர்கள் தோன்றி இறக்கின்றனர் எனவும், ஆயிரம் பிரம்மாக்கள் தோன்றி மறைந்தாலும், இவரது ரோமங்களில் கால்பகுதிதான் உதிர்ந்து போயிருக்கும் எனவும் இவரது உடலில் உள்ள எல்லா ரோமங்களும் உதிர்ந்து போகும் நாளில் இவரது ஆயுள் முடியும் எனவும் குறிப்புகள் உள்ளன. இதனால் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற புராண கதைகளில் குறிப்பிடப்படுகிறார்.