வஃகாக்கா
வஃகாக்கா (Oaxaca) அல்லது ஒவஃகாக்கா திக் வாரேழ் என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான ஒவஃகாக்காவில் அமைந்துள்ள ஒரு முக்கியத் நகரம் ஆகும். அம் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகின்றது. மாநிலத்தின் மத்தியப் பள்ளத் தாக்குப் பகுதியிலிருக்கும் மத்திய மாவட்டத்தில் சியாரா மாதிரே மலைகளின் அடிவாரத்தில், அதோயாக் ஆற்றங்கரையோரத்தில் இந்நகரம் வீற்றிருக்கின்றது. இந் நகரத்தின் முக்கிய தொழிலாக சுற்றுலாத் துறை வியங்குகின்றது. காலனித்துவக் காலத்துக் கட்டடங்கள், மற்றும் பண்டைய சபாதேக் மற்றும் மீஸ்தேக் பண்பாட்டு தொல்லியல் தலங்களும் மக்களைக் கவரக் கூடியவை[1]. இந்நகரமும், தொல்லியல் தலமான மாண்டே அல்பான் ஆகியவையும் 1987-யில் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. [2]. கேலாகுவைட்சா என்ற பெயரில் ஆண்டு தோறும் ஒரு மாதம் முழுவதும் ஏழுசீமைகளைச் சேர்ந்த ஒவாஃகாக்கா பழங்குடி மக்களின் பண்பாட்டை பறைசாற்றும் கலைவிழா நடப்பதுண்டு. இதில் ஆடல் பாடல், ஒவாஃகாக்கா பெண்களுக்கான அழகுப் போட்டிகளும் நடைபெறுவதுண்டு[3].
ஒவஃகாக்கா | |
---|---|
நகராட்சிப் பகுதி | |
ஒவஃகாக்கா திக் வாரேழ் | |
Country | மெக்சிக்கோ |
State | வஃகாக்கா |
Founded | 1532 |
Municipal Status | 1879 |
அரசு | |
• Municipal President | Javier Villacaña Jiménez வார்ப்புரு:PRI party 2014-2016 |
பரப்பளவு | |
• நகரம் | 85.48 km2 (33.00 sq mi) |
ஏற்றம் of seat | 1,555 m (5,102 ft) |
மக்கள்தொகை (2014) Municipality | |
• நகரம் | 3,00,050 |
• Metropolitan | 6,50,000 |
நேர வலயம் | ஒசநே−6 (CST) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (CDT) |
Postal code (of seat) | 68000 |
இடக் குறியீடு | 951 |
இணையதளம் | (எசுப்பானியம்) /Official site |
அலுவல் பெயர் | Historic Centre of Oaxaca and Archaeological Site of Monte Albán |
வகை | Cultural |
வரன்முறை | i, ii, iii, iv |
தெரியப்பட்டது | 1987 (11th session) |
உசாவு எண் | 415 |
State Party | Mexico |
Region | Latin America and the Caribbean |
குறிப்புகள்
தொகு- ↑ "மெக்சிக்கோ-ஒவாஃகாக்கா அறிவுக் களஞ்சியம்: ஒவாஃகாக்கா திக் வாரேழ்". Archived from the original on 2013-01-10. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Municipality of Oaxaca". Archived from the original on 2009-08-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-30.