வகா (பாட்டு)

வகா (和歌; தமிழில் சப்பானியப் பாட்டு) அல்லது யமாத்தொ உதா என்பது சப்பானிய செம்மொழி இலக்கியத்தின் பிரிவாகும். ஹெய்யன் காலத்தில் இச்சொல்லின் பயன்பாடு தொடங்கியது. அக்காலத்தில், சப்பனியப் புலவர்கள கன்ஷி எனப்படும் சீனப் பாடலகளையும் எழுதினர். கன்ஷியிலிருந்து சப்பானியப் பாடல்களை வேறுபடுத்த இச்சொல் உருவாக்கப்பட்டது.[1][2][3]

தோற்றம்

தொகு

வகா என்பது முதலில் பல்வேறுபட்ட வகையான பாடல்களைக் குறிக்கப் பயன்பட்டது, முக்கியமாக தண்கா (短歌, சிறுபாடல்) மற்றும் சோக்கா (長歌, பெரும் பாடல்), இவையில்லாமல் புஸ்ஸொக்குசேகிகா, செதோக்கா மற்றும் கதஉதாவையும் குறிப்பிட்டது. ஆனால், ஹெய்யன் காலத்திலேயே தண்காவைத் தவிர மற்ற பாடல்முறைகள் மறைந்தன.

அசை எண்

தொகு

மரபுவழியில் வகா பாட்டிற்கு மோனைச் சொல், அல்லது அமைப்பு இல்லை. உண்மையாகவே, மோனைச் சொல் இருந்தால் அது மிகப் பெரிய தவறு எனக் கருதப்பட்டது. வகா பாட்டுகளில் முன்தோற்றமாகவே தீர்மானித்திருக்கும் அசை எண்ணிலேயே எழுதப்பட்டிருக்கும்.

தண்கா (சிறுபாட்டு)

தொகு
இரகானா ஒலிபெயர்ப்பு    தமிழ்,
銀も ஷிரொகனெ மொ    (அவை எனக்கு என்ன) வெள்ளியா?,
金も玉も குஙானெ மொ தமா மொ தங்கமா? வைரமா (விலைமிகு கற்கள்)?
何せむに நனிஸெமு நி     எக்காலத்திலும் எவ்வாறாயினும் வைக்கப்படுமா
まされる宝 மஸாராரெரு தகரா புதையலுக்கிணையாக (அன்புள்ளோர்கிணையாக)
子にしかめやも கோ-னி ஷிகாமே யமோ ஒரு குழந்தையை? அவற்றால் இயலாது.


மேற்கோள்கள்

தொகு
  1. Brocade by Night: 'Kokin Wakashu' and the Court Style in Japanese Classical Poetry (in ஆங்கிலம்). Stanford University Press. October 1985. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-6645-6.
  2. Britannica Kokusai Dai-Hyakkajiten entry for "Waka".
  3. Sato, Hiroaki and Watson, Burton. From the Country of Eight Islands: An Anthology of Japanese Poetry. Columbia University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-06395-1 p.619
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகா_(பாட்டு)&oldid=4102739" இலிருந்து மீள்விக்கப்பட்டது