வகிடு எடுத்தல்
சீமந்தம் எனும் வளைகாப்பு சடங்கின் போது, கர்ப்பிணி பெண்களுக்கு செய்யும் சடங்காகும். இந்த சடங்கின் போது கர்ப்பவதியின் தலை முடியின் நடுவில், முள்ளம் பன்றியின் ஒரு முள்ளைக் கொண்டு இரண்டாகப் பகுப்பதாகும். வகிடு எனில் இரண்டாகப் பகுத்தல் எனப்பொருள். பகுத்த தலைமுடியின் முன்நெற்றி மீது குங்குமம் இடுவது வழக்கம். வகிட்டில் இலக்குமி வசிக்கும் இடம் என்பதால், வீட்டில் வளம் கொழிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
மேலும் திருமணமான பெண் என்ற அடையாளத்தையும் வெளிப்படுத்தும். காலில் மெட்டி, தலை வகிட்டில் குங்குமம இரண்டில் எது தென் பட்டாலும் அவர்களைத் தாய் போல நடத்த வேண்டும் என்பதற்காக இந்த அடையாளம்.
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தரிய லகரியின் 100 சுலோகங்களில் அம்பாளின் அழகு வருணிக்கப்படுகிறது. அதில் 44, 45 ஆவது சுலோகங்கள் தலை முடி வகிடு, அதன் மங்கலத்தன்மை மற்றும் இலக்குமித் தன்மை ஆகியவற்றை விளக்குகிறது.
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு