வகுப்பறையின் கடைசி நாற்காலி

வகுப்பறையின் கடைசி நாற்காலி என்பது ஆசிரியர் ஒருவரின் வகுப்பறை அனுபவ நூலாகும்.[1]

வகுப்பறையின் கடைசி நாற்காலி
நூலாசிரியர்ம.நவீன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்புலம்
வெளியிடப்பட்ட நாள்
2016
பக்கங்கள்96
ISBN978-81-9078-781-9

ஆசிரியர் குறிப்பு

தொகு

'வல்லினம்' இணைய இதழின் ஆசிரியர், 'பறை' எனும் ஆய்விதழின் ஆசிரியர், 'யாழ்' எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர் எனப் பல துறைகளில் பங்களித்து வரும் ம. நவீன் மலேசியாவில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துள்ளார்.

நூல் அறிமுகம்

தொகு

பத்தி எழுத்துகளாக ஒரு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்த 24 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கல்வித்திட்டமும், கல்வி நோக்கும், பாடத்திட்டமும், தேர்வு முறைகளும் ஒரு மாணவருக்கு சினேகிதமானதாக இருக்கின்றனவா என்பதை இந்நூல் மூலம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.

நூலின் சாரம்சம்

தொகு

மேற்குலகத்தின் குறிப்பாக அமெரிக்காவின் மாற்றுக் கல்விச் சிந்தனைகளில், விசாரணைக் கல்வி அல்லது ஆய்வாராய் கல்வி" (Inquiry education) எனும் அணுகுமுறையை அறிமுகம் செய்து வைத்த நீல் போஸ்லட்மேன், சார்லசு வெய்ன்கார்ட்னெர் என்ற இரு அமெரிக்கக் கல்வியாளர்கள், "கல்வியென்பது கலகஞ் செய்வதே" எனும் ஒரு நூலை எழுதியுள்ளனர். ஒரு மாணவனைப் பதிலளிக்கத் தயார் செய்வதைவிடக் கேள்வி கேட்க வைப்பதில் முனைப்பு கொண்டதே இக்கல்விமுறை. இவ்வாசிரியரின் வகுப்பறை அனுபவங்களும் இதனையே வலியுறுத்துகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு