வகுப்பறை மேலாண்மை

வகுப்பறை மேலாண்மை (Classroom management) என்பது கற்றல்-கற்பித்தல் மாணவர்களின் இடையூறு இன்றி சீராக இயங்குவதை உறுதி செய்யும் செயல்முறையை விவரிக்க ஆசிரியர்கள் பயன்படுத்தும் சொல்லாகும். சீர்குலைக்கும் நடத்தையை முன்கூட்டியே தடுப்பதையும், அது நடந்த பிறகு திறம்பட கையாள்வதையும் இந்த வார்த்தை குறிக்கிறது.

Children at desks in a classroom. One child raises her hand.
குழந்தைகள் பேச விரும்பும் போது கைகளை உயர்த்துவது போன்ற நடைமுறைகளை நிறுவுவது ஒரு வகை வகுப்பறை மேலாண்மை நுட்பமாகும்.

பல ஆசிரியர்களுக்கு கற்பித்தல் கடினமான அம்சமாகும். வகுப்பறை மேலாண்மையில் ஏற்படும் பிரச்சனைகளால் சிலர் கற்பித்தல் பணியினை விட்டு விலகுகின்றனர். 1981 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய கல்விச் சங்கம் 36% ஆசிரியர்கள் தங்களுக்கு மீண்டும் தங்களது பணியினை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் தாங்கள் மீண்டும் கற்பித்தல் பணிக்கு செல்லமாட்டோம் என்று கூறியதாக அறிவித்தது.இதற்கு மாணவர்களின் எதிர்மறை மனப்பான்மையும் ஒழுக்கமும் ஒரு முக்கிய காரணமாகும். [1]

மொசுக்கோவிட்சு ஹேமனின் கூற்றுப்படி (1976) படி, ஓர் ஆசிரியர் தங்கள் வகுப்பறையின் கட்டுப்பாட்டை இழந்தவுடன், அந்தக் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவது அவர்களுக்கு மிகவும் கடினமாகிறது. [2]

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. Wolfgang, Charles H; Glickman, Carl D (1986). Solving Discipline Problems. Allyn and Bacon. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0205086306. https://archive.org/details/solvingdisciplin00wolf. 
  2. Moskowitz, G.; Hayman Jr., J.L. (1976). "Success strategies of inner-city teachers: A year-long study". Journal of Educational Research 69 (8): 283–289. doi:10.1080/00220671.1976.10884902. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுப்பறை_மேலாண்மை&oldid=3499977" இலிருந்து மீள்விக்கப்பட்டது