வகைக்குறி
வகைக்குறி என்பது ஒரு பண்டம், சேவை, கருத்துரு, மனிதர், அல்லது அமைப்பை தனித்துவப்படுத்தும் முன்னிறுத்தும் ஓர் அடையாளம். பெயர், சின்னம், பிடிவரி, விளம்பரம் என பல வகைகளில் ஒன்றின் வகைக்குறி வெளிப்படுத்தப்படுகிறது. வகைக்குறியை வைத்து நுகர்வோர் நுகர் பொருளிட்களின் தரம், விலை, மதிப்பு, பூர்வீகம் போன்றவற்றை ஊகிக்க கூடியதாக இருக்கும்.